இயேசுவின்
திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்
இயேசுவின் திருஇதயமே எங்கள்
குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். நன்றி கூறுகின்றோம். எங்களை
ஆசீர்வதியும். எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து வாழ வரம் தாரும்.
பலவீனர்களுக்கு பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நல்ல
மனத்தையும் தந்தருளும். விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும்
நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும். சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில்
இருக்கின்றவர்களை ஆசீர்வதியும்.
உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும், தெய்வ
பயத்தையும்,
நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும், அறிவையும், தந்தருளும்.
மரண தருவாயில் இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும். ஆன்மாக்களை விண்ணகத்தில்
சேர்த்தருளும். எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும்
சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும். ஆமென்.
இயேசுவின்
திருஇருதய மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய
இயேசுவின் திருஇதயமே
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திருஇதயமே
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த
இயேசுவின் திருஇதயமே
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய
இயேசுவின் திருஇதயமே
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான
இயேசுவின் திருஇதயமே
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான
இயேசுவின் திருஇதயமே
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான
இயேசுவின் திருஇதயமே
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற
இயேசுவின் திருஇதயமே
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
இயேசுவின் திருஇதயமே
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான
இயேசுவின் திருஇதயமே
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும்
இயேசுவின் திருஇதயமே
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் இயேசுவின் திருஇதயமே
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள
இயேசுவின் திருஇதயமே
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
இயேசுவின் திருஇதயமே
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான
இயேசுவின் திருஇதயமே
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின்
செம்மறியே –
3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள
இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்

மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இலங்கை
நாட்டுக்காகத் தேவதாயாருக்குச் செபம்
மிகவும் நேசமும் தயாபரமும் நிறைந்த
தாயே! இலங்கையின் இராக்கினியும் பாதுகாவலியுமானவளே. உமது பிள்ளைகளாகிய எங்களின்
அவசர தேவைகளின்போது எங்களைக் கருணைக் கண்கொண்டு நோக்கியருள வேண்டுமென்று இரந்து
மன்றாடுகின்றோம்.
நேசத்தாயே, யுத்த அபாயங்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் எம்மைக் காப்பாற்ற தக்க தருணத்தில் எமக்கு பாதுகாவலாக வந்துள்ளீர். ஏன்றுமே தோல்வி காணாத உம்முடைய அன்பைப் பார்த்து சகலவிதமான் வன்செயல்களிலிருந்தும் பகைமைகளிலிருந்தும் எம்மை காப்பாற்றியருள வேண்டுமென்று இரந்து மன்றாடுகின்றோம். எமது நாட்டில் நீதியினது அன்பினதும் இராச்சியத்தை கட்டியெழுப்ப அருள் புந்தருளும். அன்பான தாயே உமது தாய்ககுய அன்பையும் ககனையையும் நன்றாக அறிந்து கொண்ட நாம் எமது நாட்டிலுள்ள சகல இனத்தவர்களையும் மக்களையும் உமது அன்பான பராமப்பிலும் பாதுகாப்பிலும் ஒப்படைக்கின்றோம். எமது சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவர எமக்கு உதவி புந்தருளும். நாமனைவரும் ஒரே குடும்பத்தின் சகோதர சகோதகள் போல் வாழ எம்மத்தியில் நிலையான சமாதானத்தைப் பெற்றுத்தந்தருளும். ஆமென்.

முன்னுரை:
பிரியமானவர்களே,
இந்த ஆண்டை இளையோர் ஆண்டாக கொண்டாட அழைப்பு பெற்றிருக்கும் நாம் பாடுகளின் காலத்தில், இளைஞராக இருந்து, கொள்கையோடு வாழ்ந்து, பிறருக்காக, குறிப்பாக தன் நண்பர்களுக்காக இன்னுயிரை ஈந்த எம் பெருமான் இயேசுவின் பாடுகளின் பாதை சொல்லும் விழுமியங்களை சிந்திக்க அழைக்கின்றோம்.
இவருடைய பிறப்பே அர்த்தமுள்ளது. மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி, கடவுளின் மகன் என்ற நிலையில் அல்லாமல், சிலுவை சாவையேற்று, மானுடம் மறுவாழ்வு பெற வேண்டும் என்ற உன்னத உயர்ந்த கொள்கைக்காக தன்னுயிரை மனமுவந்து கொடுத்தார் இறைஞனாய் இருந்த போதே.
நம்முடைய பிறப்பும் அர்த்தமுள்ளது தான். நாமும் நல்ல நோக்கத்துடனே படைக்கப்பட்டு உள்ளோம். படைத்த இறைவன் அதனாலேயே ‘நல்லது என கண்டார், மனிதனை படைத்த பின்னரும’; என விவிலியம் கூறுகின்றது.
ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். எபேசி 02:10
என்றும் இளமையாய் வாழ்ந்து வர இயேசுவின் விழுமியங்கள் சொல்லிக் காட்டும் பாடங்களை சிந்தித்து, வாழ்வாக்க இந்த வழிபாடு உதவ இணைந்து செபிப்போம்.

செபிப்போம்:
ஆவியானவரே, அன்று பணியை தொடங்குவதற்கு முன்னர் இயேசுவின் மீது தங்கி வல்லமையாய் செயல்பட்டது போல இந்த பயணத்திலே பங்கெடுக்கும் எம்மீதும் தங்கி, நல்லவைகளை கண்டு போற்றி, எமதாக்கி சாட்சியாய் வாழ்விலே வாழ்ந்து எம் பிறப்பையும் அர்த்தமுள்ளதாக்க வரம் தாரும்.
முதலாம் நிலை
பிலாத்து முன்னிலையில் இயேசு
குற்றமற்றவராக இருந்த போதிலும் உம்மையே தாழ்த்தி, அவர்களின் குற்றசாட்டுக்களுக்கு உம்மை ஒப்புக் கொடுத்து எங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கின்றீர்?
வாழ்விலே பல நேரங்களில் குற்றமற்ற மனிதர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றார்கள். ஏவுகின்றவர்கள் யாரோ, ஆனால் மாட்டிக் கொள்வதோ அம்பு தான். நொறுக்கப்படுவதுவும் அம்புத் தான். இரத்தத்தை பார்ப்பதுவும் அம்புத் தான்.
யாரோ இயக்கி, இடைத் தரகராக யாரோ இருந்து செயல்பட்டு, இன்றைக்கு சாதாரண வேலையின்றி தவிக்கும் இளையவர்கள், படித்துக் கொண்டு இருக்கும் அன்பர்கள், துடிப்போடு எதையாவது சாதிக்க நினைப்பவர்கள், திக்கு தேடி அலைபவர்கள் பயன்படுத்தப்பட்டு வாழ்வையே இழந்து போகின்ற நிலை இன்றும் தொடர் கதையாகிப் போனகின்றது என்பதுவே உண்மை.
எல்லா குற்றச் செயல்களிலும் இன்றைக்கு பிடிபடுவது என்னமோ இளையவர்கள் தான். உண்மை குற்றவாளிகள் இவர்கள் தானோ? உள்ளே இருப்பவர்கள் எல்லாரும் குற்றவாளிகள் இல்லை, வெளியே நடமாடுபவர்கள் எல்லாரும் புத்தரும் காந்தியும் இல்லை என்ற பாடலின் வரிகளே நினைவுக்கு வருகின்றது.
இளமையில் நம்மை இயக்குவது யார்? எந்த கொள்கை இயக்குகின்றது என்பதிலே கவனம் கொள்வது நல்லது. நிதானமாக ஆலோசித்து, யோசித்து இதனால் நான் வாழ்வு பெறுவேனா என்று கேட்டுப் பார்த்து வாழ்வை தீர்மானிப்பது அறிவுடைமையாகும்.

இறைவா உம் ஆவியை தாரும். திக்கு தெரியாது அலையும் எம் மனத்தில் உம் ஆவியை குடியிருக்கச் செய்து, நாங்கள் அலைக்கழிக்கப்படுகின்றோமா? பயன்படுத்தப்படுகின்றோமா? என்பதை தெளிவுபடுத்தி சரியான பாதையில் நடந்திட வரம் தாரும்.
இரண்டாம் நிலை
பாரமான சிலுவை இயேசுவின் தோள் மீது
மக்களின் பாவங்களை, குற்றங்களை நீர் உம்மீது பாரமான சிலுவையாக சுமந்து கொண்டு குற்றவாளியாக கருதப்பட முன் வந்தது எதனால்?
இளையவர்கள் எப்பொழுதுமே பிறருடைய சுமைகளை தாங்கிக் கொள்ளும் இதயம் பெற்றவர்கள். யார் எவர் என்று பாராமல் இளையவர்கள் எப்பொழுதுமே மற்றவர்களின் சுமைகளை பகிர்ந்து கொள்ள முன்வருபவர்கள். இத்தகைய மனநிலையை நீரும் கொண்டு இருந்தீர் என்பதனை எமக்கு வெளிக்காட்டுகின்றீர்.
பவுலடிகளாரும் இதனையே தன்னுடைய மடல்களில் வெளிப்படுத்துகின்றார். திருச்சபை என்னும் பெரிய குடும்பத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணி பிறரது சுமைகளை தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும். கலா 6:2 ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். மற்றவர்களுடைய குறைகளை அறிய முன்வரும் போது, பொறுமையோடு அவர்களை பரிவுடனே திருத்த கடமைப்பட்டவர்கள். இது நாம் செய்ய வேண்டிய திருப்பணியாகும் என்கிறார். (2கொரி 2: 5-11)
லேவி 19: 17 உன் சகோதரரை உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள். என்ற இறைவாக்கின்படி எங்களது பாவங்களை எல்லாம் உம் மேல் சுமந்து கொண்டு எங்களுக்காக நீர் குற்றவாளியாக முன்வந்தீர் என்பதனை நாங்களும் உணர்ந்து கொள்ள செய்து இருக்கின்றீர்.
பிறரை குறற்வாளி என தீர்ப்பிட்டு, அவர்களது மேல் களங்கத்தை ஏற்படுத்தும் அவச் செயலை செய்யாது, அவர்களது பாவச் சுமையை இறக்கி வைக்க முன்வரும் போதே நாங்கள் உம்முடைய திருப்பணியைச் செய்கின்றோம் என்பதனை உணரச் செய்தமைக்கு நன்றி!

இறைவா! குற்றப்படுத்துவதும், குற்றத்தை குறைகளை பெரிதுபடுத்துவதும் உம் செயல் அல்ல. மாறாக மற்றவர்கள் தங்களது பாவத்திலேயே தொலைந்து போகாமல், அவர்களது சுமைகளை இறக்கி வைக்கும் சுமை தாங்கிகளாக வாழ்வதுவே உம் திருப்பணி என்பதை உணர்ந்து நடந்து கொள்ள புதிய இதயம் தாரும்.
மூன்றாம் நிலை
முதல் தடுமாற்றம்
பாரமான சிலுவை, தளர்ந்த மனம், அவமானகரமான பயணம் இவையெல்லாம் அழுத்த, பயணத்தில் ஒரு தடுமாற்றம். இது இயற்கையானது என்றாலும், எமக்கு சொல்லும் பாடம் தான் என்ன?
இளமையான வாழ்வில் அடியெடுத்து பயணிக்க முற்படும் போது கவர்ச்சி, போதை, புகை என எதிலாவது நாங்கள் தடுமாற்றத்தை காண நேரிடுகின்றது. இதெல்லாம் இயற்கைத் தானே. யார் இதில் தடுமாற்றம் காணாது போகிறார்கள்?
இளமை வாழ்வு என்பது அற்புதமானது, ஆற்றல் பெற்றது என்பது உண்மையென்றாலும், எம்மை பெற்றவர்கள் எம்மைக் குறித்து பயப்படுகின்ற காரியம் – எங்களது தடுமாற்றம் இயற்கையென்றாலும், அவர்களும் அதனை கடந்து வந்தவர்கள் என்றாலும், நாங்கள் அந்த தடுமாற்றத்தில் விழுந்து எழ இயலாது போவோமா என்பது தான். அவர்களது பயத்திலும் அர்த்தம் இல்லாது போகவில்லை.
இன்றைக்கு கவர்ச்சி, போதை, புகை போன்ற எதிலாவது இளைய சமூகம் விழுந்து போகின்றது. வளர்ச்சி முன்னேற்றம் என்று நாங்கள் கருதுகின்ற பல இதற்கு துணை போகின்றது என்பதையும் அறியாமல் இல்லை. கணனி, இணையதளம், கைப் பேசி, சின்னத்திரை, வெள்ளைத் திரை, ஏ அப்பப்பா எத்தனை எத்தனை. . .
தடுமாற்றம் இயற்கையானது தான். ஆனால் தடுமாற்றத்தை சாதகமாக்கி கொண்டு அதிலேயே சுகம் காண்பது மனிதமே இல்லையென உம்முடைய பயணம் சொல்லிக் காட்டுகின்றது.
பாரத்தால் தடுமாறினாலும், இலட்சியத்தை கண்முன் கொண்டு, பயணிக்க வேண்டிய தூரத்தை கண் முன் கொண்டு எழுந்து உதறிவிட்டு நடக்கின்றீரே, அது தான் உம்மை உயர்த்தியது. நீர் ஒரு இலட்சியவாதி என சொல்லி நிற்கின்றது.

இறைவா, தடுமாற்றம் எல்லாருக்கும் சொந்தமானது என்றாலும், நான் தடுமாற்றத்தை சந்திக்கின்ற போது, எம் பெற்றோரை கண்முன் கொண்டு இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என உணர்ந்து, உடனே எழுந்து நடக்க அருள்தாரும்.
நான்காம் நிலை
தாயின் சந்திப்பு சேய்க்கு தெம்பு
பாடுகளை கண்டு பயம் கொள்ளாது பயணிக்க, தெம்பூட்டும் பார்வையை தந்திட அன்னையின் சந்திப்பு உம் திட்டம் தானோ?
வாழ்வின் பயணத்தில் பெற்றோரின் துணை அற்புதமானது. கண்கண்ட தெய்வங்களாக எம்முடனே பயணிப்பவர்கள் அவர்கள் தான். உம்மை விசுவாசத்திலே எமக்கு அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே. இன்றைக்கு எங்களை படைத்து தரணியிலே வாழச் செய்ய உடன்படைப்பாளிகளாக அவர்களையே நீர் பயன்படுத்திக் கொண்டீர் என்பதனையும் அறிகின்றோம்.
வயதுக்கு வந்தவர்கள் நாங்கள், எங்களுக்கு எல்லாம் தெரியும், யாரும் எங்களுக்கு எதுவும் சொல்ல தேவையில்லை, உங்களுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல, என்று சொல்லிப் பார்க்கின்ற வயது இந்த இளமைப் பருவம்.
தந்தையரின் கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர் என்ற நீதி மொழிகளின் கூற்றையும் 15: 5, சொல்லாலும், செயலாலும் உங்களது பெற்றோரை மதியுங்கள் என்ற சீராக்கின் கூற்றையும் 3:8 எங்களுக்கு தந்தமைக்கு நன்றி.
பெற்றோரின் பார்வை சொல்லும் மொழி அற்புதமானது, அழகானது, அர்த்தமுள்ளது. பார்வையிலேயே எது சரி, எது தவறு என்பதனையும் பாராட்டா, வாழ்த்தா, அல்லது கண்டிப்பா என்று உணர்த்தும் அழகே தனியழகு தான்.
இந்த பெற்றோரின் பார்வையைப் புரிந்து கொள்ளாது, அதனை ஏற்க இயலாது நாங்கள் போகும் போதே பல நேரங்களில் எங்களுக்கும் அவர்களுக்கும் பார தூர இடைவெளி ஏற்படுகின்றது. அதுவே எங்களை மேலும் மேலும் குற்றச் செயல்களுக்கு இட்டுச் செல்லுகின்றது.
அன்றைக்கு உம்முடைய ஒரு பார்வையிலே இருந்த அர்த்தத்தை உணர்ந்த பேதுரு தன்னைத் திருத்திக் கொண்டதால் நீர் சொன்னபடியே திருச்சபையின் தலைவரானார் என்பதனை அறிகின்றோம்.

பெற்றோரின் பார்வை சொல்லும் அர்த்தத்தை உணர்ந்து, எங்களை எங்களது வாழ்வை நாங்கள் சீர் செய்து கொள்ளும் வரம் தாரும் இயேசுவே!

ஐந்தாம் நிலை
சீமோனின் உதவி
கடவுளின் மகன் என்ற நிலையிருந்த போதும், எல்லாம் வல்லவராக இருந்த போதிலும், எதையும் செய்ய ஆற்றல் பெற்றவராக இருந்த போதிலும், சாதாரண சீமோனின் உதவியைப் பெற்றுக் கொள்ள முன்வந்தது எதனால்?
மனிதர்கள் தனித் தீவாகிட முடியாது. காரணம் தனிமரம் தோப்பாகிட முடியாது. மனிதர் ஒரு சமூக விலங்கு. அவர் அடுத்தவரை சார்ந்தே வாழ்ந்திடல் வேண்டும்.
இளமையில் உள்ள உணர்வான, ‘எல்லாம் என்னால் சாதித்திட முடியும், நான் யாரையும் சார்ந்து வாழ்ந்திடல் அவசியமில்லை’ எனச் சொல்லி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் மனநிலையை மாற்றிட தான் இந்த அழைப்பா?
சகோதரர்கள் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லது, எவ்வளவு இனிமையானது என்ற தாவீது அரசரின் அறைக்கூவலும், எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உம்முடைய வேண்டுதலும் சொல்லிக் காட்டுகின்ற பாடம் இதுதானோ?
மற்றவர்களின் திறமைகளையும், தனித்தன்மைகளையும் மதித்து ஏற்று பயணிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டியிருக்கின்றீரோ? இதற்கான தாழ்ச்சியைப் பெற்றுப் கொண்டாலேயே வாழ்வு சிறக்கும் என்பதுவும் உண்மைத் தான்.
‘பணிவையே பெரிதும் நாடு’ (சீராக் 7:17) என்ற இறைவாக்கு கற்றுக் கொடுக்கின்ற பாடத்தை ஏற்று, எங்கெல்லாம் மற்றவரின் உதவிப் பெற்று இயைந்துப் பணியாற்றிட முடியுமோ அங்கெல்லாம் உதவிகளைப் பெற்று பங்காளிகளாக மற்றவர்களையும் ஆக்கிக் கொள்வது பணியினை சுலபமாக்கும், அதுவே செயலினை சிறப்பானதாகவும் ஆக்கும்.

எல்லாம் வல்லவரானாலும், உதவி செய்ய முன்வருவோரையும், உதவி பெற்று வாழும் காலத்தையும் முறையாகப் பயன்படுத்தி, மற்றவர்களுடன் இயைந்து செல்லும் மனதினை எமக்குத் தாரும்.

ஆறாம் நிலை
பெண்ணின் வீரம்
கோரையான முகத்தோடும், இரத்தம் படிந்த உடலோடும், வீரர்கள் புடை சூழ செல்லும் பயணத்தில் இளம் பெண்ணின் அக்கறையோடு கூடிய தொடுகையை அனுமதித்து சொல்லும் செய்தி தான் என்ன?
ஓடும் பாம்பை மிதித்துப் போடும் வயது வாலிப வயது. எதையுமே துணிச்சலோடு செய்யத் துடிக்கும் வயது இளமையின் வயது. நல்லது எனக் கண்டால் பின் விளைவுகளை யோசிக்காது களத்தில் இறங்கும் மனோபாவம் இளமையின் வேகம்.
வீரர்கள் புடை சூழ வந்த போதிலும், வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் சூழ்ந்திருக்கும் போதும், பெண்ணினத்தை மதிக்காத மாமனிதர்கள் என்ற போர்வையில் வாழும் மனித மிருகங்கள் மத்தியிலும், தான் மதித்த மனிதருக்கு காயம், கோரம் என்று கண்ட பெண்மணி, துணிச்சலோடு தன்னால் ஆன உதவி அந்த நேரத்தில் இது தான் என எண்ணி, தான் வைத்த துணியைக் கொண்டு இயேசுவின் முகத்தை துடைத்து, தன் தொடுகையினால் ஆறுதல் கொடுத்து தேற்றுகின்றாள்.
நல்ல காரியங்களை செய்ய துணிச்சல் போதுமானது. அதனை நல்ல மனத்தோடு செய்யும் போது, யார் செய்ய முன் வந்தாலும் அதனை அனுமதிப்பது என்பது பாராட்டுக்குரியது. அதனையே வாய்ப்பு கிடைக்கும் போது நாமும் செய்ய முன்வருவது என்பது கிறிஸ்தவத்தின் படிப்பினை என்பதுவே இந்த பெண் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
கடவுள் நமக்கு தந்தது கோழையுள்ளத்தினை அல்ல, மாறாக அன்பு, வல்லமை, கட்டுப்பாடு கொண்ட இதயத்தையே என பவுல் அடிகளார் தீமோத்Nதுயுவுக்கு கூறுகின்றார் 2தீமோ 1:7

இறைவா, நல்லது செய்ய அன்போடு கூடிய வல்லமையைப் பெற்று, கட்டுப்பாடு கொண்ட இதயத்துடனே காரியங்களை செய்து உம்முடைய சாட்சியாய் வாழும் வரம் தாரும்.
ஏழாம் நிலை
இரண்டாவது தடுமாற்றம்
பயணத்தின் பாதையில் இரண்டாவது தடுமாற்றம். பாதைகளில் இழுத்துச் செல்லப்பட கால்கள் தள்ளாடி, நீர் தடுமாறி இரண்டாம் முறையாக தரையை முத்தமிட்டீர் என சிந்திக்க எங்களை அழைக்கின்றீர்.
இளையவர்களின் வாழ்வில் காதல், புகை, மது என தடுமாற்றத்தை கண்டப் பின்னர், அதிலிருந்து மீண்டு வரும் போது அடுத்த கட்ட தடுமாற்றம் ஏற்படுவது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற மனோபாவம். இது அவர்களை அடிமைப்படுத்தி அந்த பணத்தை சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டுகின்றது என்பதனை பார்க்கின்றோம்.
இத்தகைய மனோபாவத்திற்கு காரணமாக அமைவதுவே அவர்களது உதாரித்தனமான செலவீனங்களே. தாங்களும் பணமில்லாது நட்பு பாராட்ட முடியாது. பணமில்லையென்போமானால் மதிக்கமாட்டார்கள் என்ற கருத்து நிலவுவதால் அதிக பணத்தினை எதிர்பார்த்து பணமும், உடையும், உணவும் இவர்களுக்கு பெரிதாகப்படுகின்றது.
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது, பெற்றவர்களை சபிப்பது, உடன்பிறந்தாருக்கு இடையூறு விளைவிப்பது என்ற பாவச் செயல்களுக்கு அடிமைப்பட்டு போய் தங்களது அமைதியை நிம்மதியை தொலைக்கின்றனர்.
இதற்கு காரணமாக அமைகின்ற எளிமையான வாழ்வு மட்டில் அவர்களிடம் இல்லாத தெளிவும், எளிமை என்பது ஏளனமான ஒன்று என்ற கருத்தும், வெளிப்புற வறட்டுத்தனமான கௌரவ வாழ்வும் தான் இத்தகைய பாவத்திற்கு இளையவர்களை அடிமைப்படுத்தி கீழே விழச் செய்கின்றது.
இறைவனது போதனையே, எளியவர்கள் பேறுபெற்றோர், ஏழைகளாய் வாழ்வோர் பேறுபெற்றோர் என்றே அமைந்துள்ளது. ‘இறைப்பற்றில்லாதோரே வறுமை தீயது’ என்பர் என வேதம் கூறுகின்றது. சீராக் 13: 24

இறைவா, பிறக்க இடமில்லாது மாடடை குடிலினில் பிறக்க முன்வந்தீர். அடக்கம் செய்ய கூட அயலானின் கல்லறையை தேர்ந்து கொண்டீர். உம்முடைய எளிமை உயர்வு தந்து வரலாற்றில் இடம் பெற்று விட்டீர். இதனை உணர்ந்து வாழும் வரம் தாரும் இயேசுவே.
எட்டாம் நிலை
மகளீரின் கண்ணீர்
பாடுகளின் பாதையில் மகளீர் படை சூழ்ந்து வருத்தம் தெரிவிக்க, அவர்களிடம், உங்களுக்காகவும், உங்களது குழந்தைகளுக்காகவும் அழுங்கள் எனச் சொல்லி அவர்களை சிந்திக்க செய்யும் நோக்கம் தான் என்ன?
படைப்பினிலே ஆணையும் பெண்ணையும் படைத்து நல்லது எனக் கண்ட நீர், இருவருக்கும் ஆற்றலையும், அறிவையும் தந்து சமத்துவமான சமூகத்தை படைத்து கொடுத்த நீர், இன்று காணும் சமூகமோ, பெண்ணை மதிக்காது, மரியாதையாய் நடத்தாது, போதையாகவும், சுமையாகவும், இழிவாகவும் கருதி வருவதனால், உங்களை எண்ணிப் பாருங்கள் என்று அழைத்தீரோ.
இன்றைக்கு பெண்களை சமமாக கருதி வாழும் வாழ்வை விடுத்து விட்டு, சமூகம் இது, பண்பாடு இது என்று பல காரணங்களை சொல்லி அடிமைச் சமூகமாகவே இருந்து வருகின்ற இந்த ஆண் ஆதிக்கச் சமூகம் என்றைக்கு தான் இதை உணரப் போகின்றது?
பெண்களிடமும் உணர்வு உண்டு. பெண்களிடமும் அறிவு உண்டு. ஆற்றல் பெற்றவர்கள் தான் அவர்கள் என உணாந்து ஏற்றுக் கொள்ளும் சமூகம் தான் நல்ல வளாச்சியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
பெண்களே இன்றைக்கு தன்னை அடிமைப்படுத்துகின்ற ஆண் ஆதிக்க சமூகத்திற்கு ஏற்ப தங்களின் உணர்வுகளை புதைத்து, சக பெண்களையும், சிறப்பாக விடுதலை உணர்வுள்ள பெண்களை சகித்துக் கொள்ள முடியாது போனால், சமூகம் எத்தகைய வளர்ச்சியை பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தகைய சூழலில் அடிமைத்தனத்தை மாற்றி இறையாட்சிக்குரிய விழுமியத்தைக் கை கொண்டு ஒழுக நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
இதனையே பவுல் அடிகளார், “உங்களிடையே பால் இன வேறுபாடுகூட இருப்பது ஒன்றாய் வந்து திருவிருந்துண்ண தடையாகும”; என்றதும் சிந்திக்க கூடியதே.

இறைவா உம் விருப்பத்திற்கு ஏற்ப சமத்துவ சமூகம் படைக்க அருள்தாரும்.
ஒன்பதாம் நிலை
மூன்றாம் முறை தரையில்
எழுந்தாலும் நடந்தாலும் மறுமுறையும் விழுந்து, தொடர்ந்த தடுமாற்றம் பயணத்தில் உண்டு என்பதனை உணர்த்திக் காட்டுவதன் நோக்கம் தான் என்ன?
மூன்றாவது எண்ணிக்கைக்கு அல்ல, மாறாக தடுமாற்றம் வாழ்விலே பயணத்திலே தொடரத் தான் செய்யும், தளர்ச்சியடையாது, நமக்கு முன் தடுமாறியவர்கள் கரம் கொடுத்து தூக்கிவிட இருக்கும் போது அவர்களின் துணை பெற்று வாழ்விலே பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
இன்றைக்கு இளையவர்கள் பயணத்தில் எத்தனையோ தடுமாற்றங்களைச் சந்தித்து வருகின்றார்கள். அது ஒரு தொடர்கதையானாலும், சிந்திக்க வேண்டிய ஒன்று. தங்களது விசுவாசத்திலே ஏற்படுகின்ற தடுமாற்றம் இவர்களை பின்னடைவு அடையச் செய்கின்றது என்பதனை புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
கேள்விகள் கேட்கும் வயதுக்கு வரும் அவர்கள் தங்களது விசுவாசத்தையும், நடைமுறை நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து கேள்வி கேட்டுப் பார்த்து விசுவாச தடுமாற்றத்தை சந்திக்கின்றார்கள். இதிலே அவர்களுக்கு தவறான மாதிரிகை காட்டப்படுகின்றது. போதிப்பது ஒன்று, நடைமுறை வேறொன்று. ‘நான் எப்படியும் இருப்பேன், ஆனால் மற்றவர்கள் மாத்திரம் ஓழுக்கமாக இருக்க வேண்டும்’ என்ற மனநிலை. இது போன்று தங்களை வழிநடத்த பொறுப்பேற்றுள்ள பெற்றோர், கல்வியாளர்கள், மத குருமார்கள், துறவிகள் என்பவர்கள் முரண்பட்ட தங்களது வாழ்வினால் காட்டும் துர்மாதிரிகை இத்தகைய இளையவர்களை தடுமாற்றம் காணச் செய்கின்றது என்பது உண்மைத் தான்.
“அவர்கள் சொல்லுவார்கள், செய்யமாட்டார்கள். அவர்கள் சொல்லுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள், அவர்களைப் பார்த்து நடக்காதீர்கள்” என்ற இறைவார்த்தையை இளையவர்கள் கருத்தில் கொள்வது அவசியமானது.
விசுவாச தடுமாற்றத்தில் மற்றவர்கள் மாற வேண்டும் என கோராமல், தான் இத்தகைய முரண்பாடுகளை களைந்து, சொல்லும் செயலும் ஒத்த வாழ்வு வாழ்வது என எழுந்து நடப்பதுவே அறிவார்ந்த செயலாகும்.

இறைவா இளையவர்களுக்கு நல்ல மாதிரிகையைக் காட்ட வரம் தாரும். விசுவாசத்தை எங்களிலே அதிகரித்தருளும் இறைவா.
பத்தாம் நிலை
ஆடைகள் அகற்றப்படுதல்
அவமானம் வாழ்விலே அகற்றப்பட இயலாத கறை என்பதனை உணர்ந்திருந்தும், உம்முடைய ஆடைகளை அகற்றி உம்மை அவமானப்படுத்திட முற்படும் கயவர்கள் முன்னிலையில் கையாலாகதவராக நிற்பதன் மர்மம் என்ன?
இளையவர்கள் தங்களது வாழ்விலே தங்களது தடுமாற்றங்களினால் அவமானத்தைப் பெற்று வருகிறார்கள் என்பது உண்மையானது. இவர்கள் அவமானப்படுவதோடு தங்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தாரையும், உறவுகளையும் அவமானப்படுத்துவது தான் வேதனைக்குரியது. இந்த கறை தேவையானது தானா? எதைக் கொண்டும் அகற்ற இயலாத இந்நிலை வாழ்வின் எதிர்காலத்தில் காணும் போது, வாழ்வு முழுவதையும் அழுகையாலே கழுவிக் கொள்ள முற்படுவதும் நாம் பார்க்கின்ற ஒன்றே.
ஆத்திரத்தில், அவசரத்தில், யோசிக்காமல், கலந்தாலோசிக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என இளையோர் நடக்க முற்படும் போது கறைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்த கறை இளைய வயதிலே வரக் கூடியது சகஜம் தானே என்று வேறு சொல்லி சமாளித்துக் கொள்வதாக நினைக்கின்றனர்.
இது இளையவர்களுக்கு சகஜமாக இருக்கலாம், ஆனால் இதனால் பாதிப்பு பெற்றவர்கள் உற்றவர்கள் என பெரிதும் பலரையும் பாதிக்கிறதே என இளையவர்கள் உணர்ந்திட முன்வருவது நல்லது. இந்த அவமானங்கள் இன்று கலாச்சாரத்தையும் பாதிக்கின்றது என்பது ஏனோ அறியப்படாத நிலையிலே உள்ளது. ‘கட்டிக்கிட்டு ஓடுவது, பெற்றெடுத்து விட்டு கட்டிக் கொள்வது, பெற்றப் பின்னரும் கட்டிக் கொள்ளாமல் இருப்பது’ என்பது பாட்டுக் சரியாக இருக்கலாம் ஆனால் வாழ்வுக்கும் நம்முடைய கலாச்சாரத்திற்கும் சரியாக வருமா என ஏன் யோசிக்காமல் இருக்கின்றோம்.
நம் சமூகத்தில் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் தரும் சந்தோஷமே அவர்களின் சம்மதத்துடனும் ஆசிருடனும் அமையும் திருமண வாழ்வு தான். சிரமமாக இருந்தாலும், சுமையாக இருந்தாலும், அதிலே உள்ள சுகமே தனித்தான் என்பதனை உணர்ந்திட முன்வருவது நல்லது.

இறைவா! எமக்காக எம்முடைய பாவங்கள் உம்மை அவமானப்பட வைத்த போதும், எம் நல்வாழ்விற்காக ஏற்றுக் கொள்ள முன் வந்தீரே, நாங்கள் உறவுகளுக்கு எந்த சூழலிலும் அவமானத்தை கொடுக்கும் செயல்களை செய்யாது இருக்கும் அறிவைத் தாரும்.

பதினென்றாம்
நிலை
அறையப்படுதல்
நல்லதையே செய்ய நடந்த கால்கள், அள்ளிக் கொடுத்த கரங்கள் ஆணிகளால் அறையப்படுவதை எப்படி எடுத்துக் கொள்ள என்று எங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றீர்?
இளையவர்கள் கண்டிக்கப்படுவதை விரும்புவதில்லை. தன்னுடைய சுயம் பாதிக்கப்படுகின்றதோ என அவர்கள் எதிர்க்க முற்படுகின்றார்கள். கண்டிப்பு என்பது காட்டிற்கு போகிறவர் எடுத்துச் செல்கின்ற கைவிளக்கு போன்றது. இருட்டாய் உள்ள காட்டை அதன் அழகை அந்த கைவிளக்கு காட்டி விடுவதில்லை. மாறாக அடுத்த அடி அந்த காட்டினில் எடுத்து வைக்க மிகவும் உதவியாய் இருக்கும். வாழ்க்கையை முழுவதையும், அதனுடைய சிறப்பையும் காட்டி விடாது. மாறாக வாழ்வில் நாம் அடுத்த அடியெடுத்து வைக்க சரியான பாதையில் செல்ல வழி காட்டும் என்பதுவே உண்மை.
முதியோரின் உரைகளைப் புறக்கணியாதே. சீராக் 8:9 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர், கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர். நீதிமொழி 12:1
இளையவர்களின் வளர்ச்சிக்காய் கொடுக்கப்படும் அறிவுரைகள் எல்லாம், அது யாரிடமிருந்து வந்தாலும், உண்மை அன்பு கொண்டதனாலேயே என்பதனை உணர்ந்து ஏற்றுக் கொள்ள முற்படும் போதே வளர்ச்சி உண்டு, வாழ்வும் உண்டு.
அறைதலை அனுமதிக்கின்றார். அலறி அடித்து ஆர்ப்பாட்டம் செய்து, எதிர்த்திடவில்லை. தான் அறையப்படுவது, மனுக்குலத்தின் மீட்புக்காக என்பதனை அறிந்ததாலேயே அமைதியாக அனுமதிக்கின்றார்.
இளையச் சமூகமும் தன் மீது விழும் அறை, தன்னை பக்குவப்படுத்துவற்காகத் தான், தன்னை மெருகூட்டவே என்பதனை உணர்ந்து கொண்டு திருத்தப்பட தன்னை அனுமதித்தால் அளப்பறிய நன்மைகளை பெற்றனுபவிக்கலாம்.
சிலையாக விரும்பும் கல் தன்மீது அடி விழுவதை அனுமதிப்பதில்லையா?

இறைவா நாங்கள் திருத்தப்படுவதற்காகவே தண்டிக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை எமக்குத் தாரும்.

பனிரெண்டாம்
நிலை
மரணம்
உம்முடைய மரணம் நல்ல காரியத்திற்காக என்றாலும், வாழ்வு அர்த்தம் பெறுவது நம்முடைய நல்ல செயல்களாலே என்பதனை தான், உம்முடைய மரணம் எங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றதோ?
வாழ்வு அர்த்தம் பெற வேண்டும். அர்த்தமற்ற வாழ்வு கனிக் கொடா மரம் போல. இதற்காகவே அற்புதமான வாழ்வு பரிசாக தரப்பட்டுள்ளது. கொடையாக பெற்ற உயிர் மூச்சை பேணிக் காத்து, உரியவரிடமே ஒப்புக் கொடுப்பது தான் வாழ்வுக்கான அர்த்தம். இத்தகைய வாழ்வினில் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த மரணத்தை எப்படி எதிர் கொள்வது என்பது இறைவார்த்தையின் ஒளியில் தியானிக்கவே இவரது மரணம் அமைந்துள்ளது.
“என்பொருட்டு வாழ்வை இழப்பவர்கள,; அதனை பெற்றுக் கொள்வார்கள்” என்கின்றார். வாழ்வு எந்த நோக்கத்துடனே தனக்கு தரப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்து சாவை ஏற்றுக் கொள்கின்றார். எனவே அவர் மரித்தும் உயிர்வாழ்கின்றார் என்பதுவே நம்முடைய நம்பிக்கை.
இளையவர்கள் தங்களது வாழ்வின் நோக்கம் அறிந்து கொண்டு வாழ்வது என்பது அவசியமானது. அந்த நோக்கத்திற்காய் மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் அதனை துணிவுடனே எதிர் கொள்ளும் மனநிலை பெற வேண்டும்.
அருட்செல்வி ராணி மரியா போன்ற பல பணியாளர்கள் தங்களது குறிக்கோள் அறிந்து தங்களை அர்ப்பணித்தார்கள். அன்னை தெரசா போன்றவர்களும் தன் வாழ்வின் நோக்கம் அறிந்து அத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் வாழ்ந்தார்கள். இன்றும் பல மறைப்பணியாளர்கள் இறையாட்சியின் நம்பிக்கையில் உறுதியாய் நின்று சான்று பகர்ந்திருக்கிறார்கள் என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வோம். வாழ்வை அலட்சியமாய் என்னாமல் அர்த்தமுள்ளதாய் எண்ணி அர்ப்பணமாக்குவோம்.

உம் ஆவியை எமக்குத் தாரும் இயேசுவே. நாங்கள் எங்களை எந்த நோக்கத்திற்காய் படைத்தீர் என்பதனை தெரிந்து எங்களை அர்ப்பணமாக்கிட, அதற்காய் மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் துணிவுடனே ஒப்புக் கொடுக்க அருள்தாரும்.

பதிமூன்றாம்
நிலை
தாயின் மடி
மீண்டும் தாயின் மடிக்கு போன நீர், குழந்தையான போது சுமையாக இல்லாமல், சுகமாக இருந்தீர், இப்பொழுது பாரமாக, வேதனையாக மாறிப் போனதின் அர்த்தம் என்ன?
பறவைக்கு இறக்கை சுமையாகிட முடியுமா? மனிதனுக்கு கரங்கள் சுமையாகிட முடியுமா? பிள்ளைகள் பெற்றவர்களுக்கு சுமையாகிட முடியுமா? இல்லை பிள்ளைகளுக்குத் தான் பெற்றவர்கள் சுமையாகிட முடியுமா?
சுமை என்றுத் தானே இன்று தொட்டில் குழந்தைத் திட்டம் கொடி கட்டிப் பறக்கின்றது. அனாதை இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள் தளைத்து வளருகின்றன. முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைவோரின் பட்டியல் பெருகி வருகின்றது.
நடைபிணமாக மனிதர்கள் மாறிப் போகின்ற போது, மற்றவர்களை பாரமாகவும், சுமையாகவும், பார்க்க முற்படுகின்ற போது, இத்தகைய நிலை உருவாகின்றது என்பதுவே உண்மை.
இந்த சூழலிலும் எத்தனையோ இளையவர்கள் தங்களது குடும்பத்தினர் வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுண்டு. தங்களது சுக துக்கங்களை மறைத்து நாட்டினர் நலத்துக்காய் தங்களை அர்ப்பணித்துக் கொள்வோரும் உண்டு. தங்களது வயது முதிர்ந்த பெற்றோருக்காக தங்களது இல்லறத்தை தியாகம் செய்வோரும் உண்டு. தன் படிப்பை நிறுத்தி உழைத்து சம்பாதித்து தன் உடன் பிறந்தாரின் எதிர்காலத்தை வளமாக்கியவர்கள் நம்மிடையே உண்டு.
இந்த புவியினில் யாரும் யாருக்கும் சுமையல்ல. பால் குடிக்கும் சேயை தாய் மறப்பாளோ, அப்படியே மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்றவரின் வழி மரபினர் நாம். அற்புத தாய் அன்னை மரியாளின் செல்வங்கள் நாம். மரியாள் பாரமாக சுமையாக கருதி தன் மகனை விட்டுச் செல்லவில்லை. இன்றும் நம்மை சுமையாக கருதாமல், நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுத்து பரிந்து பேசுகின்ற அன்பு தாயின் மக்கள் நாம் இதனை உணர்வோம்.

இறைவா அன்பு அன்னை மரியாவைப் போல, யாரையும் எவரையும் பாரமாக கருதாமல், வியாகுலங்களை உள்ளத்திழன் ஆழத்தில் இருத்தி சிந்தித்து, உம்மிலே மகிழ்ந்து வாழ வரம் அருளும்.

பதினான்காம்
நிலை
கல்லறை
நாற்றம் எடுக்கும் கல்லறை வரை உம்முடைய உடலைக் கையளிக்க முற்பட்ட நீர் இன்று நடமாடும் கல்லறையாக மாறிப் போய் இருக்கும் எங்களுக்கு அறிவுறுத்துவது என்ன?
இளையவர்களாகிய நாங்கள், எங்களது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க முன்வரும் வேளையிலே எங்களது மனங்கள் இன்று கல்லறைகளாகிப் போனதோ என நினைக்கத் தோன்றுகின்றது. நுகர்வு வெறி இன்று தலைவிரித்தாடுகின்றது. ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என எதைப் பார்த்தாலும் அதனைப் பெற்று விட வேண்டும். அது தேவையா, மிகவும் அவசியமானது தானா? இந்த அளவுக்கு பணம் கொடுத்து பெற எனக்குத் தகுதியுண்டா? இதனால் என்ன தகுதி கூடிப் போகப் போகின்றது என்பது போன்ற எந்த கேள்விக்கும் இடமின்றி, ‘பார்த்தேன் பெற்றேன, பயனில்லையா தூக்கியெறி’ என்ற எண்ணத்திற்குள் இன்றைய தலைமுறை நாங்கள் பயணிக்கின்றோம்.
மனதினை ‘இன்னும், இன்னும்…’ என பலவற்றால் கல்லறையாக்கி, பூச்சியும், துருவும் சங்கமிக்கின்ற இடமாக்கி வைத்துள்ளோம். ஆசைகளுக்கு அளவே இல்லை என்ற நிலையில், கட்டுப்பாடுகளை விதைக்காது சேறாக்கி வைத்துள்ளோம். இத்தகைய உணர்வினால் நீர் படைத்து தந்தள்ள இந்த அற்புதமான பிரபஞ்சத்தை குப்பை மேடாக்கி இயற்கையை அழித்து, சிதைத்து வைத்துள்ளோம் என்பதுவே உண்மை.
நாற்றம் எடுக்கும் நீர் குட்டை, மாசுபட்ட காற்று, பசுமையை இழந்த காடுகள், விலங்குகள் இல்லாத சரணாலயங்கள் என்றே இந்த பூமியை எங்களது சுயநலங்களால் மாற்றி கல்லறை மேடாக்கி வைத்துள்ளோம். இதனால் மனங்களும் இன்று சுடுகாட்டைப் போல மயான அமைதியிலே தத்தளிக்கின்றது. உயிர்ப்பு உண்டு என்ற நம்பிக்கையும், தளிர் தோன்றும் என்ற தன்னம்பிக்கையும் எங்களுக்கு வாழ்வு தரட்டும்.
செபிப்போம்:
இறைவா பயணித்தோம் உம்முடைய பாதையின் அடிசுவட்டில். தெளிவு பெற்றவர்களாய், விழுமியங்களை வேராக்கி, ஆழமான விசுவாசத்தால், உம் சீடர்களாய் வாழ உம் ஆவியின் அருளையும், ஆசீரையும் தாரும் இயேசுவே.

என்னோடு தங்கும்
ஆண்டவரே
நற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்

என்னோடு தங்கும் ஆண்டவரே! உம்மை
மறவாதிருக்க,
நீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம். எவ்வளவு எளிதாக
உம்மைக் கைவிட்டு விடுகிறேன் என்பதை நீர் அறிவீர்.
என்னோடு தங்கும் ஆண்டவரே. ஏனெனில் நான் பலவீனன். அடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க உமது பலம் எனக்குத் தேவை.
என்னோடு தங்கும் ஆண்டவரே. எனக்கு வாழ்வே நீர்தான். நீர் இல்லை என்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை.
என்னோடு தங்கும் ஆண்டவரே. நீரே என் ஒளி. ஏன்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் ழ்கின்றேன்.
உமது சித்தம் எதுவென எனக்குத் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே.
உமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே.
என்னோடு தங்கும் ஆண்டவரே. இறுதி வேளையில் திருவிருந்து வழியாக இல்லையென்றாலும் உமது அன்பு அருள் மூலமாக என்னோடு தங்கும்.
என்னோடு தங்கும் யேசு சுவாமி. தெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை. ஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன். ஆனால் உமது பிரசன்னம் என்ற பெருங்கொடையை எனக்கு தாரும் சுவாமி.
என்னோடு தங்கும் ஆண்டவரே. ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் நாடுகின்றேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன்.
இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை நோக்கி செபம்
கொடிய உபாதைகளினாலும் பாடுகளினாலும் மனிதர்களின் இழிந்தவாராகவும் வியாகுலம் நிறைந்த மனிதனாகவும் ஆன ஓ யேசுவே! ஒருக்கால் தெய்வீகத்தின் அழகு சௌந்தயமும் இனிமையும் ஒளி வீசியதும், இப்போது ஓர் குடரோகியினதைப் போல ஆகியிருக்கிறதுமான உமது திருமுகத்தை ஆராதித்து வந்திருக்கின்றேன். நைந்து நொறுங்கி உருகுலைந்த உமது திருமுகத் தோற்றத்தில் உமது அளவற்ற அன்பைக் காண்கிறேன். அதனால் நான் உம்மை நேசிக்கவும் மற்றவர்கள் உம்மை நேசிக்கச் செய்யவும் என் உள்ளம் ஆவலால் நிரம்பியிருக்கிறது. ஒளிவீசும் வரை கற்கள் போன்று உமது திருக்கண்களில் ததும்பும் கண்ணீரை வாச் சேர்த்து அவைகளினால் பாவிகளின் ஆத்துமங்களை இரட்சிக்க விரும்புகிறேன். உமது ஆராதனைக்குய திருமுகத்தால் என் இதயத்தை இன்பக் கடலில் ஆழ்த்தும் ஓ இயேசுவே! உமது தெய்வீகப் பிரதிமையை என் உள்ளத்தில் ஆழமாய் பதித்தருளும். எனது இருதயம் உமது நேச அக்கினியால் பற்றியெயவும், அதனால் உமது ஜெகஜோதி முகத்தை மோட்சத்தில் கண்டு ஆனந்திக்க அருகதை உள்ளவனாக ஆகவும் கிருபை புந்தருள வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். அன்றியும் எனது தற்போதைய தேவையில் எனது இருதயப் பேராவலைக் கையேற்றுக் கொண்டு உம்மிடமாய் நான் தாழ்மையோடு கேட்கும் மன்றாட்டை அடியேனுக்கு தந்தருளும். சுவாமி. ஆமென் யேசு.

கிருபைதயாபத்து
செபம்
கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க, என் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது உம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள்மேல் திருப்பியருளும். இதனின்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே தாயாபரியே, பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியே. ஆமென்.

குழந்தை இயேசுவின் நவநாள் செபம்
அற்புதக் குழந்தை இயேசுவே, அமைதியற்ற
எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்படி தாழ்ந்து
பணிந்து வணங்கி உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள்
வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம். (வரத்தைக் குறிப்பிடுக…) எங்களை
வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும் வேதனை சோதனைகளையும் நீக்கி உமது குழந்தைப்
பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும்
ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப்
போற்றுவோமாக. ஆமென்.
குழந்தை இயேசு மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவாகிய சர்வேசுரா … …
உலகத்தை மீட்ட சுதனாகிய சர்வேசுரா … …
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, … …
உண்மை மனிதனும் ஆண்டவருமான பாலனே
உமது வல்லமையால் ஆச்சரியங்களைக் காட்டும் பாலனே
உமது வல்லமையால் எமக்கு மனத்துணிவு தரும் பாலனே
உமது வல்லமையால் தீமையகற்றும் பாலனே
உமது வல்லமையால் நரகத்தை வெல்லும் பாலனே
உமது வல்லமையால் உலகத்தையே கையில் ஏந்திய பாலனே
எமது இதயங்களை அறிந்து அளவிலா ஞானம் நிறைந்த பாலனே
உமது கடைசிகதி அடைய உமது பராமரிப்பினால் ஏவுகின்ற பாலனே
உமது உண்மை ஒளியால் எமது இதய இருளைப் போக்கவல்ல பாலனே
உமது தயாளத்தில் எமது ஏழ்மையைப் போக்கும் பாலனே
எமது துன்ப வேளையில் ஆளுதலளிக்கும் பாலனே
உமது இரக்கத்தால் எங்களுக்கு மன்னிப்புதரும் பாலனே
உமது நீதியால் எம்மை பாவத்தில் விடாது காக்கும் பாலனே
உமது அழகின் பார்வையால் எமது இதயங்களை கவரும் பாலனே
உமது அன்புத்தீயால் எமது குளிர்ந்த இதயங்களை
பற்றியெயச் செய்யும் பாலனே
உமது புதுமை கரங்களால் எல்லா ஆசீரையும் அருளும் பாலனே
உமது புனித நாமத்தால் விசுவாசிகளின் இதயங்களை
இன்புறச் செய்யும் பாலனே
உமது மகிமையால் உலகத்தை நிரப்பும் பாலனே
எல்லாத் தீமைகளிலிருந்தும் இயேசுவே எங்களைக் காத்தருளும்
எல்லாப் பாவங்களிலிருந்தும் இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது அளவற்ற நன்மைத் தனத்தை ஏற்றுக்கொள்ளாத அவநம்பிக்கையிலிருந்து இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது புதுமைசெய்யும் வல்லமைகளுக்கு விரோதமாக எழும் சந்தேகங்களிலிருந்து இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமக்கு ஆராதனை செய்யும் குறைபாடுகளிலிருந்து இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது கன்னித்தாய் மரியாள், புனித சூசையப்பர் இவர்களின் வேண்டுதலால் இயேசுவே எங்களைக் காத்தருளும்
எமக்கு நேரிடும் எல்லாவித தீமைகளிலிருந்து
இயேசுவே எங்களைக் காத்தருளும்
உமது மன்னிப்பை எங்களுக்குத் தரும்படியாக உம்மை மன்றாடுகின்றோம். எம் மன்றாட்டைக் கேட்டருளும்
உமது பாலபருவத்தின் மட்டில் எமது அன்பையும் பக்தியையும் வளர்க்கும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உமது எண்ணற்ற பேருதவிகளை நாங்கள் எப்போதும் நினைவுகூரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உமது இயேசுவின் திருஇருதய அன்பால் எம்மை பற்றியெரியச்செய்ய உம்மை மன்றாடுகிறோம்
உம்மை நம்பிக்கையுடன் அழைக்கும் அனைவரின் மன்றாட்டுகளுக்கும் செவிசாய்க்கும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உம்மிடம் பக்தியுள்ள எல்லோருக்கும் நித்திய வாழ்வு தரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உமது இரக்கமுள்ள தீர்ப்பை எம் இறுதிநாளில் தரும்படியாக உம்மை மன்றாடுகிறோம்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3

அற்புதமான இயேசு பாலகனே, இதோ உம்முன் விழுந்து கிடக்கின்றோம். துன்பம் நிறைந்த எமது இதயங்களின் மேல் உமது இரக்கத்தைப் பொழிந்தருளும். எமக்கு வரும் கவலைகளையும் தீமைகளையும் துன்பங்களையும், அவநம்பிக்கையையும் அகற்றி எமது வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும். உம்மைப் பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் புகழ்ந்து பாடும்படி உமது புனித பால உருவத்தை முன்னிட்டு எமக்கு ஆறுதலையும் உதவியையும் தந்தருளும். ஆமென்.

திருப்பலி செபங்கள்
குரு : தந்தை மகன் தூய ஆவியாரின்
பெயராலே
எல் : ஆமென்
எல் : ஆமென்
குரு : நம் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் அருளும்,
கடவுளின் அன்பும், தூய ஆவியாரின்
நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக
குரு : சகோதர சகோதரிகளே, திருப்பலி
ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும்பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்..
எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது
இரக்கம் வைத்து நம் பாவங்களை மன்னித்து நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச்
செல்வாராக.
எல் : ஆமென்
எல் : ஆமென்
குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்
குரு : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்
குரு : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்
குரு : ஆண்டவரே இரக்கமாயிரும்
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்
வானவர் கீதம்
உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.
பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய சர்வேசுரா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா,
ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே.
ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே,
பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்,
நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்.
பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய
சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. ஆமென்.

விசுவாச அறிக்கை
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்.
வானமும் பூமியும் காண்பவை காணாதவை,
யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.
கடவுளின் ஏக சுதனாய் செனித்த,
ஒரே ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
இவர் யுகங்களுக்கெல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
மெய்யங் கடவுளினின்று மெய்யுங் கடவுளாக செனித்தவர்.
இவர் செனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
பிதாவோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும்,
வானகமிருந்து இறங்கினார்.
தூய ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு,
சிலுவையிலே அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார்.
வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.
சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க,
மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.
அவரது அரசுக்கு முடிவிராது.
பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியையும் விசுவசிக்கின்றேன்.
இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக,
ஆராதனையும் மகிமையும் பெருகின்றார்.
தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஏக பரிசுத்த கத்தோலிக்க,
அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும்
ஏற்றுக் கொள்கின்றேன்.
மரித்தோர் உத்தானத்தையும்,
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.

குரு : சகோதர சகோதகளே, நாம்
அனைவரும் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு
ஏற்றதாகும்படி செபியுங்கள்.
எல் : ஆண்டவர் தமது திருச்சபையின்
புகழ்ச்சிக்காகவும்,
மகிமைக்காகவும், நமது
நன்மைக்காகவும்,
திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது
கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்
எல் : அது தகுதியும் நீதியுமானதே
குரு : ஆண்டவரே தூயவரான . . …. … …. ஒரே குரலாய் சொல்வதாவது.
எல் : பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். மூவுலகின் தேவனாகிய ஆண்டவர். வானமும், பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஓசான்னா. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர். உன்னதங்களிலே ஓசான்னா.

திருவிருந்து சடங்கு
குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சிபெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

எல் : பரலோகத்தில் இருக்கிற எங்கள்
பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.
உம்முடைய இராச்சியம் வருக,
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

குரு : ஆண்டவரே தீமை… ….. ….. மகிழ்ச்சியுடன்
எதிர்பார்த்திருக்கின்றோம்
எல் : ஏனெனில் அரசும் வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே
குரு : ஆண்டவராகிய இயேசு … … என்றென்றும் ஆட்சிசெய்கின்றவர் நீரே
எல் : ஆமென்
குரு : ஆண்டவருடைய அருளும் அமைதியும் உங்களோடு என்றும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக
எல் : ஏனெனில் அரசும் வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே
குரு : ஆண்டவராகிய இயேசு … … என்றென்றும் ஆட்சிசெய்கின்றவர் நீரே
எல் : ஆமென்
குரு : ஆண்டவருடைய அருளும் அமைதியும் உங்களோடு என்றும் இருப்பதாக
எல் : உம்மோடும் இருப்பதாக
உலகின் பாவம் போக்கும் இறைவனின்
செம்மறியே,
எங்கள்மேல் இரக்கமாயிரும் (2)
உலகின் பாவம் போக்கம் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை தந்தருளும்.

குரு : இதோ இறைவனின் செம்மறி! இதோ
உலகின் பாவங்களைப் போக்குகின்றவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றவர் பேறுபெற்றோர்.
எல்š : ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்.
எல்š : ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்.
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : எல்லாம் வல்ல இறைவன், தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக
எல் : ஆமென்
குரு : சென்று வாருங்கள். திருப்பலி நிறைவேறிற்று.
எல் : இறைவா உமக்கு நன்றி.

தூய அந்தோனியார்
நவநாள் செபம்
புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோனியாரே எங்கள் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி, எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே, நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.

எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, மகிமையில்
விளங்கிடும் புனித லீலியே,
துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின்
ஆறுதலே,
உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து
ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில்
வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும்.
அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும்.
எங்கள் குடும்பங்களையும்,
வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும்.
நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.
தூய அந்தோனியார்
மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே
கன்னியரில் உத்தம கன்னிகையே
பதுவைப் பதியரான தூய அந்தோனியாரே
பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோனியாரே
தூய்மையில் லீலி மலரான தூய அந்தோனியாரே
தவ வலிமை மிக்க தூய அந்தோனியாரே
தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோனியாரே
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோனியாரே
தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோனியாரே
போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோனியாரே
நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோனியாரே
இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோனியாரே
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோனியாரே
விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோனியாரே
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோனியாரே
மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோனியாரே
அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோனியாரே
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோனியாரே
குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோனியாரே
ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோனியாரே
உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோனியாரே
பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோனியாரே
பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோனியாரே
மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோனியாரே
பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோனியாரே
காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோனியாரே
பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோனியாரே
கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோனியாரே
விஷஉணவு அருந்திய தூய அந்தோனியாரே
அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோனியாரே
புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோனியாரே
உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோனியாரே
கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோனியாரே
உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோனியாரே
எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோனியாரே
நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோனியாரே
பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோனியாரே
சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோனியாரே
நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோனியாரே
இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோனியாரே

செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
மன்றாடுவோமாக
தூய அந்தோனியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தூய ஆவியை
நோக்கிய செபம்
தூய ஆவியே என் ஆருயிரே உம்மை
ஆராதிக்கிறேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்கு திடமளித்து என்னை
தேற்றும் நான் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை
தெயப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நான்
அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.
- கர்தினால் மெர்சியா
- கர்தினால் மெர்சியா
தூய
சூசையப்பருக்கு நவநாள் செபம்
எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தாய், உம் ஒரே மகனின் வளர்ப்புத் தந்தையாக நீதிமானாக புனித சூசையப்பரைத் தேர்ந்தெடுத்தீரே. எங்களைக் காக்கவும் நல்வழியில் வளர்க்கவும் எங்களுக்கும் அவரைப்போன்றே காவலர்களைத் தந்தருளும். அதனால் உம் அன்பு மகன் இயேசுவைப் போன்று உருவாகும் இறைமக்கள் உமக்கு ஏராளமாகத் தோன்றுவார்களாக.
இறைவனாயிருந்தும் உம்மையே சூசையப்பர் கையில் ஒப்படைத்து அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே, நாங்களும் எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், திருச்சபைக்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள்புரியும்.
திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்த நித்திய புனித ஆவியே, எங்கள் குடும்பத்தையும் இறைவனின் திருவுளத்திற்கேற்ப அமைத்து பாதுகாத்தருள்வீராக.
இயேசுவை வளர்க்கும் பணியில் புனித சூசையப்பரை உமது வாழ்க்கையின் துணைவராகவும் உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய புனித கன்னிமரியே, அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத்தாரும். அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை இறைவனின் திருவுளத்திற்கேற்ப எளிமையில் அமைத்து நடப்போமாக.
திருக்குடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பரே, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. திருக்குடும்பத்தை உம் உழைப்பாலும் உணவூட்டிக் காத்த புனித சூசையப்பரே, எங்கள் அறிவாலும், உழைப்பாலும், எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து செழிப்புறச் செய்து துணைபுரிவீராக.
குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித சூசையப்பரே, எங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.
இயேசுமரியின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து நன்மரணமடைந்த புனித சூசையப்பரே, நாங்களும் நல்மரணமடைய எங்களுக்காக மன்றாடுவீராக. ஆமென்.

தூய சூசையப்பர்
மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய சூசையப்பரே
தாவீது அரசரின் புகழ்பெற்ற புத்திரனே
முதுபெரும் தந்தையரின் மகிமையே
தேவதாயாரின் பத்தாவே
கன்னி மரியாளின் கற்புள்ள காவலனே
தேவகுமாரனை வளர்த்த தகப்பனே
கிறிஸ்துவை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே
திருக்குடும்பத்தின் தலைமையானவரே
உத்தம நீதிமானான புனித சூசையப்பரே
உத்தம விரத்தரான புனித சூசையப்பரே
உத்தம விவேகமுடைத்தான புனித சூசையப்பரே
உத்தம தைரியசாலியான புனித சூசையப்பரே
உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான புனித சூசையப்பரே
உத்தம பிரமாணிக்கமுள்ளவரான புனித சூசையப்பரே
பொறுமையின் கண்ணாடியே
தரித்திரத்தின் அன்பனே
தொழிலாளிகளுக்கு மாதிரிகையே
இல்லற வாழ்க்கையின் ஆபரணமே
கன்னிகைகளின் காவலனே
குடும்பங்களின் ஆதரவே
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே
வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே
மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலே
பிசாசுகளை நடுநடுங்கச் செய்பவரே
புனிதத் திருச்சபையின் பரிபாலனே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே -3

ஆண்டவர் அவரை தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார்
அவருடைய உடைமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்
அவருடைய உடைமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்
மன்றாடுவோமாக
இறைவா, நீதிமானாகிய புனித சூசையப்பரைக் கன்னியான தேவதாய்க்கு கணவராகத் தந்தருளினீர். அவருடைய பிரமாணிக்கமுள்ள பாதுகாவலில்தான் மனித மீட்பின் ஊற்றாகிய கிறிஸ்துவை ஒப்படைத்தீர். அந்த புனிதன் உதவியால் நாங்கள் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியை தொடர்ந்தாற்ற உமது அருட்கொடைகளை வழங்குமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

புனித யூதா ததேயுஸ் நவநாள் ஆரம்பகீதம்
(எல்லாரும்)
கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலரான புனித
யூதா ததேயுஸ் அப்போஸ்தலரே,
உம்மை நாடி வரும் எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்.
இயலாதவற்றை இயற்றுபவரான புனித யூதா ததேயுஸ் அப்போஸ்தலரே, உம்மை நாடிவரும் எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்.
நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கையான யூதா ததேயுஸ் அப்போஸ்தலரே, உம்மை நாடிவரும் எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்.

விசுவாசிகள்
மன்றாட்டு
குரு : சகோதரரே புனித யூதா ததேயுஸின்
வல்லமையுள்ள பரிந்து பேசுதலில்
நம்பிக்கை வைத்து, அவர் வழியாக இறைவனை மன்றாடுவோம்.

குரு : பிறப்பிலும் வாழ்விலும், இறப்பிலும்
இயேசுவோடு நெருங்கிய உறவுகொண்டு விளங்கிய யூதா ததேயுசைப் போல் நாங்களும் இயேசுவோடு
இணைந்து வாழும்படியாக,
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : ஆன்ம தாகத்தால் அயராது உழைத்து
கிறிஸ்துவையே அறியாதோர் அவரை அறிய ஃ விசுவாச ஒளியை ஏற்றிய புனித ததேயுசைப் போல
நாங்களும் ஆன்மீக மீட்பில் அக்கரை உள்ளவர்களாகவும், விசுவாச
வாழ்க்கையில் கிறிஸ்துவை அறிய செய்கிறவர்களாகவும் விளங்கும்படியாக,
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : தப்பறையான கொள்கைகளைப்
பரப்பியவர்களைக் கண்டித்து,
மெய்மறைத் தழைத்தோங்கும்படி ஃ கிறிஸ்தவர்களுக்கு திருமுகம்
எழுதி,
விசுவாசத்தை காத்த புனித யுதா ததேயுயைப் போல் நாங்களும், திருச்சபையின்
போதனைக்கு எதிரானவற்றை அகற்றி தப்பறைகளினின்று பாதுகாக்கப்பட்டு விசுவாசத்தில்
உறுதி உள்ளவர்களாய் வாழும்படியாக,
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : இறைமகனின் விண்ணேற்றத்திற்க்குப்
பின் அவரது ஆணைப்படியே எதெஸ்ஸா நாட்டிற்குச் சென்று, தொழுநோயால்
அவதியுற்ற அந்நாட்டு அரசனுக்கு அற்புத சுகம் அளித்த புனித யூதா ததேயுசை மன்றாடிக்
கேட்கும் நாங்கள்,
ஆன்ம சரீர வியாதிகள் அனைத்திலுமிருந்து
பாதுகாக்கப்படும்படியாக,
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கையான
புனித யூதா ததேயுசின் மன்றாட்டினால் திருமறை செழிப்புற்று ஓங்கவும், எங்கள்
குடும்பங்களில் நீடிய சமாதானமும், நற்சுகமும்
நிலவி@
தேவ ஆசீர்பெறும்படியாக.
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : விசுவாசத்திற்காக உயிர் துறந்த
யூதா ததேயுசைப் போல் குருக்களும், இறைமக்களும்
விசுவாசத்தில் ஆழ்ந்த பற்றும், ஆர்வமும் கொண்ட
வாழ்க்கை நடத்தி முடிவில்லா மோட்சம் சேரத் தகுதி பெறும்படியாக.
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : இந்த நவநாள் செய்வோர் அனைவரும்
விரும்பி கேட்பவையெல்லாம் விரைவில் பெற்று மகிழும்படியாக.
எல் : புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ
ஆண்டவரே! உம்மை மன்றாடுகிறோம்.
குரு : செபிப்போமாக:
எல் : எல்லா வல்லமையும் ஃ இரக்கமுள்ள
மீட்பரான ஆண்டவரே ஃ உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய
உறவினரும் ஃ அப் போஸ்தலருமான ஃ புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ நாங்கள் கேட்கும்
மன்றாட்டுக்களையெல்லாம் ஃ தயவாய்த் தந்தருளும்படி ஃ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து
வழியாக ஃ உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
நன்றியறிதல் :
குரு : அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான
புனித யூதா ததேயுசின் மன்றாட்டால் திருச்சபையில் நீர் செய்துள்ள எல்லா நன்மை
உபகாரங்களுக்காகவும்.
எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி
செலுத்துகிறோம்.
குரு : கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலரான
புனிதரின் மன்றாட்டினால் பாவிகள் மனந்திரும்பவும், கடும்
பிணியாளர்கள் நலம் பெறவும்,
நீர் செய்த எல்லா உதவிகளுக்காக.
எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி
செலுத்துகின்றோம்.
குரு : இங்கே உம் திருமுன்
குழுமியிருக்கும் நாங்கள் ஒவ்வொருவரும் உமது அப்போஸ்தலரின் பரிந்துரையால் பெற்றுக்
கொண்ட எண்ணற்ற நன்மைகளுக்காக.
எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி
செலுத்துகின்றோம்.
குரு : புனித யூதா ததேயுசின்
மன்றாட்டினால் வேத விசுவாசம் வளர்ச்சி அடைந்து, திருச்சபை
பாதுகாக்கப்பட்டு,
திருமறையைச் செழிப்புறச் செய்வதற்காகவும், எமது
குடும்பங்களில் சமாதானமும் சந்தோஷஷமும் நிலவி, தேவாசீர்
பெருகச் செய்ததற்காகவும்.
எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி
செலுத்துகின்றோம்.
குரு : நாம் அடைந்த தனிப்பட்ட
நன்மைகளுக்காக மௌனமாய் நன்றி கூறுவோம்.
சிறப்பு நவநாள்
ஜெபம்
குரு : புனித யூதா ததேயுசின் – வல்லமையுள்ள
மன்றாட்டில் நம்பிக்கை வைத்து ஃ அவர் புகழை பாடுவோமாக ஃ அவைகளை அவருக்கு அளித்த
இறைவனுக்கு! நன்றி கூறுவோமாக ஃ நமது தேவைகளையும் தப்பாமல் அடைந்து தரக் கெஞ்சி
மன்றாடுவோமாக.
எல் : மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் ஃ
வேதசாட்சியுமான ஃ புனித ஃ யூதா ததேயுசே ஃ எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு
கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே ஃ புதுமை
வரங்களில் சிறந்தவரே ஃ தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் ஃ தயாள உள்ளங்
கொண்டவரே உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு
தேவனுக்கு ஃ ஆராதனை செலுத்துகிறோம் ஃ இதயபு+ர்வமான நன்றி நவில்கிறோம்.
எங்களுக்குத் தேவையான ஃ ஆன்ம சரீர நலன்களையெல்லாம் ஃ அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஃ சிறப்பாக இப்போது ஃ எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

குரு : (நம் தேவைகளை எடுத்துக்
கூறுவோம்)
எல் : நேசிக்கப்படத்தக்கவரும் ஃ உள்ளப்
பண்பாடு உடையவரும் ஃ இறைப் புகழை பாடுபவருமான ஃ பெயர்பெற்று இயங்கும் ஃ தயாள இருதய
ததேயுவே ஃ உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும்.
யூதாசின் பெயர் ஒற்றுமையால்; ஃ உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து ஃ வகையின்றி வாடுவோருக்கு ஃ வல்லமையுடன் உதவி புரியும் ஃ அரிய வரத்தை ஃ இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.
இப்பெரிய வரத்திற்காக ஃ நாங்களும் உம்முடன் சேர்ந்து ஃ இறைவனின் புகழைப் பாடத் துணைபுரியும் ஃ அவருக்கு நன்றி செலுத்த ஃ தயை செய்யும். நீர் எங்களுக்கு செய்கின்ற ஃ இப்பேருதவிக்காக ஃ எங்கள் வாழ்நாளெல்லாம் ஃ நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம் ஃ உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். பலர் அறியாப் புனிதரே ஃ சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே ஃ பலன் தரும் உமது பக்தி ஃ பாரெங்கும் பரவ ஃ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் ஃ எடுப்போம் என்றும் ஃ உறுதியாய் வாக்களிக்கிறோம்.

புனிதரின் புகழ்
மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே இரக்கமாயிரும்,
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
பரலோக பிதாவாகிய சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
உலக மீட்பரான சுதன் சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த ஆவி சர்வேசுரா, எங்கள்மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த திரியேக சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
புனித யூதா ததேயுசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
வேத விசுவாசத்தின் சாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தரித்திரத்தை நேசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,

தேவ அன்பின் தீபமே, புனிதத்தின்
விண்மீனே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இறையருளின் பேழையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
பேய்களை நடுநடுங்கச் செய்கிறவரே,
திருச்சபையின் தூணே,
துன்புறுவோரின் ஆறுதலே,
பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே,
திக்கற்றவர்களின் சகாயமே,
திகைக்கின்றவர்களின் பிரகாசமே,
நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே, வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே,
தேவவரங்களை வழங்குவதில் மிகவும் பேறுபெற்றவரே,; கொள்ளும்,
உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே, உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க்காப்பாளரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
எங்கள் சிறப்பு பாதுகாவலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே,

குரு : செபிப்போமாக
எல் : எல்லா ஃ வல்லமையும் ஃ இரக்கமும்
உள்ள ஃ மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் ஃ உமது மனித
அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் – அப்போஸ்தலருமான
ஃ புனித யூதா ததேயுஸ் வழியாக ஃ நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம்
ஃ தயவாய்த் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் – ஆமென்.
நோயாளிகளை
ஆசீர்வதித்தல்
குரு : செபிப்போமாக
எல் : ஆண்டவரே ஃ உடல் நோயால் வருந்தும்
உமது ஊழியரைப் பாரும் ஃ நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் ஃ தாரும் ஃ நாங்கள்
துன்பங்களினால் தூய்மை அடைந்து ஃ உமது இரக்கத்தினால் ஃ விரைவில் குணமடையும்படி ஃ
அருள் புரிவீராக ஃ எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் – ஆமென்.
குரு : (வலக்கரத்தை நீட்டி) ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக்
காப்பாற்ற உங்களுக்குள்ளும்,
உங்களுக்குக் காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை
வழிநடத்த உங்களுக்கு முன்னும் உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.
எல் : ஆமென்.
எல் : ததேயுவின் கீதம்
குரு : (தீர்த்தம் தெளித்தல்)
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.
குரு : சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது.

புவியில் புதுமை
புரிபவர்
புவியில் புதுமை புரிபவரே
புனித யூதா ததேயுசே
புவியோர் எம்மைப் புரந்திடுவோர்
புதிய வாழ்வும் தந்திடுவீர்.
புனித யூதா ததேயுசே
புவியோர் எம்மைப் புரந்திடுவோர்
புதிய வாழ்வும் தந்திடுவீர்.
திருமறை போற்றும் போதகரே
திக்கற்றோரின் காவலரே
இறைவன் இயேசுவின் சாயலையே
நெஞ்சில் தரித்துக் கொண்டவரே.
திக்கற்றோரின் காவலரே
இறைவன் இயேசுவின் சாயலையே
நெஞ்சில் தரித்துக் கொண்டவரே.
இயேசுவின் அரசை வளர்த்திடவே
எழுந்த பெரும் அப்போஸ்தலரே
யேசுவின் நெருங்கிய உறவினரே
எம்குறை தீர்த்தருள் புரிவீரே.
எழுந்த பெரும் அப்போஸ்தலரே
யேசுவின் நெருங்கிய உறவினரே
எம்குறை தீர்த்தருள் புரிவீரே.
புனித யூதாவுக்கு புகழ் மாலை
(மெட்டு
: ‘அலைகடல்
ஒளிர்மீனே அல்லது ‘இராஜனாம்
இயேசுவுக்கு’)
புனித யூதாவே – உம்மை
பணிந்து புகழ்ந்து கொண்டாடுமெமை
இனிது காத்தாண்டிடவே வேந்தன் இயேசுவை வேண்டிடுவீர்!
துன்பமாம் கடல் நடுவே – வருத்தித் துடித்துத் துயர்படுவோர்
இன்பவான் துறைசேரத் – துணையாய் இலக்குமப் போஸ்தலரே
தற்பரன் உமக்களித்த – அரிய தனிப்பெரும் சலுகையினால்
பற்பல அற்புதங்கள் – புரியும் பண்பினை என் சொல்வோம்
திருமறை செழித்திடவே – உயிரைத் தியாகஞ்செய்த உடலின்
குருதியெல்லாம் சொரிந்த – வீரக் குலமணியே வாழி!
நம்பிவந் தோர்களை நீர் – எந்த நாளும் கைவிட்டதில்லை
செம்மையாய் ஆதரித்து – அன்பாய்த் தீர்த்திடுவீர் தொல்லை
யேசுவின் நற்செய்தி – கூறி சோர்வின்றி பணியாற்றி
மசுறாவின் சுடர் போல் – விளங்கும் மாதவனே வாழி!

குருக்களுக்காக
செபம்
தேவ வரங்கள் பொழிபவர்
தேவ வரங்கள் பொழிபவர்
தேவ வரங்கள் பொழியும் புனித ததேயுசே
தேவையில் வந்து உதவும் அன்புத் தீபமே
பரமன் இயேசு வழியில் எம்மை நடத்திட
இறைவன் தந்த சொந்தம் என்று நினைக்கிறோம்
உண்மை நெறியும் உயர்ந்த மனதும் வேண்டுமே
நிறைந்த வாழ்வும் வழியும் என்னில் வேண்டுமே
கல்லும் முள்ளும் எரிந்து போகவேண்டுமே
கருணை வெள்ளம் என்னில் கசிய வேண்டுமே
துன்பம் போக்கும் துயரம் நீக்கும் தூயனே
இன்பம் பெருகி இருளில் ஒளிரும் நேயன
கன்றி வந்த கண்கள் உம்மை பாருமே!
கருணை இறைவன் பாதம் எம்மை சேருமே

புனித
தோமையாருக்கு நவநாள் செபம்
எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்கப் பேறுபெற்ற புனித தோமையாரே, உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம். ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் மீது கொண்டிருந்த உன்னத பற்றுதலால் அவரோடு சாகவும் துணிந்து உடன் அப்போஸ்தலர்களுக்கும் ஊக்கமூட்டி வாழவும், வழியும், வாய்மையுமான அவரை உலகெங்கும் அறிவித்தீரே. உம்முடைய தூதுரைக்கு நன்றி கூறுகின்றோம். ஆணிகளின் ஈட்டியின் காயத் தழும்புகளைத் தரிசித்து, உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொண்டு எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தியவரே நாங்கள் எங்கள் விசுவாசத்தில் தளராமல் வாழ்ந்திட அருள்புரியும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அற்புதங்களால் எங்கள் முன்னோர்களின் பலரை சத்திய மறைக்கு கொணர்ந்தீர். இன்னும் எங்கள் நாட்டில் கிறிஸ்துவை அறியாதோர் அவரை அறியவும், அறிந்து அன்பு செய்யவும், இந்தியக் கிறிஸ்துவர் அனைவரும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் சிறந்து உலகின் உப்பாகவும், உலகின் ஒளியாகவும் வாழ்ந்திட வரம் பெற்றுத் தருவீராக.

புனித தோமையார்
மன்றாட்டு மாலை
ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவாராயிருக்க பேறுபெற்ற புனித தோமையாரே
உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவை ஆவலோடும் பிரமாணிக்கத்தோடும் பின்பற்றிய புனித தோமையாரே
வாழ்வளிக்கும் நற்செய்தியை பலநாட்டு மக்களுக்கு சிறப்பாக எங்கள் இந்திய நாட்டிற்கு அறிவிக்க வந்த புனித தோமையாரே
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவே வாழ்வும் வழியும் வாய்மையும் என அறிவிக்கச் செய்திட்ட புனித தோமையாரே
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடு சென்று உயிர்துறக்க உடன் அப்போஸ்தலர்களுக்கு ஊக்கமூட்டிய புனித தோமையாரே
உயிர்த்த ஆண்டவரை தரிசித்து என் ஆண்டவரே என் கடவுளே என்று அவரிடம் சரணடைந்த புனித தோமையாரே
நாங்கள் இயேசுகிறிஸ்துவின் உத்தம சீடர்களாய் என்றும் வாழ்ந்திட அருள்பெற்றுத் தரவேண்டுமென்று புனித தோமையாரே
நாங்கள் இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலியாமலிருக்க வரம் பெற்றுத்தரவேண்டுமென்று புனித தோமையாரே
நாங்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் சொல்லாலும் செயலாலும் இயேசுவின் சாட்சிகளாய் விளங்கிட வரம் பெற்றுத்தரவேண்டுமென்று புனித தோமையாரே
நாங்கள் இயேசுகிறிஸ்து ஒருவரே எங்கள் வாழ்வு வழி வாய்மை என்பதை கண்டுணர்ந்து அதற்கேற்ப வாழ வரம் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே
கிறிஸ்துவுக்காக எதையும் தாங்கும் தியாக உள்ளத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே
உயிர்த்த ஆண்டவரே, எங்களுக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவரில் சரணடையும் வரத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்கள் பாதுகாவலராகிய அப்போஸ்தலரான புனித தோமையாரை பெருமையுடன் கொண்டாடும் நாங்கள், அவரது பாதுகாவலில் ஆறுதலும், வழிநடத்துதலில் ஆதரவும், போதனையில் ஆதாரமும் பெறுவோமாக. உம் திருமகன் இயேசு கிறிஸ்துவே ஆண்டவரும் இறைவனுமானவர் என்ற அவரது விசுவாச அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொண்டு எங்கள் சொல்லாலும் செயலாலும், அதற்கு சான்று பகர அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

மரியன்னை
மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய்மை நிறை மூவொரு இறைவா
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே
கன்னியருள் சிறந்த கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
இறையருளின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனை அன்னையே
மீட்பரின் அன்னையே
திருச்சபையின் அன்னையே
அறிவுமிகு அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
வல்லமையுள்ள அன்னையே
தயையுள்ள அன்னையே
நம்பிக்கைக்குரிய அன்னையே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே
ஞானப் பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
பக்தி நிறை பாத்திரமே
மறைபொருளின் நறுமலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
பொன் மயமான ஆலயமே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்காலையின் விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துயருறுவோருக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையரின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியரின் அரசியே
அனைத்துப் புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு பெற்ற அரசியே
திருச்சபையின் அரசியே
குருக்களின் அரசியே
குடும்பங்களின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே

எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
இறைவனுடைய புனித அன்னையே, இதோ
உம்மிடம் சரணடைய ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும்போது
நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவளுமாய் விண்ணகத்துக்கு
உரியவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, எல்லா
ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு கிறிஸ்துவின்
வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படி இறைவனின் தூய அன்னையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா, முழுமனதுடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் கன்னியான புனித மரியாவுடைய வேண்டுதலினாலே, பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

தூய ஆரோக்கிய
அன்னைக்கு நவநாள் செபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடிவந்து உமது உபகாரங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியை கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபொழுதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே தயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழும் பாவியாகிய நாங்கள் உமது சமூகத்திலே நிற்கிறோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தாயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

nice work
ReplyDelete