இறைபுகழ் பாட

ghly;fs; midj;Jk; http://www.arulvakku.com vd;w Website y; ,Ue;J vLf;fg;gl;lJ.
nfhLf;fg;gl;bUf;Fk; ghly;fs;
1.  tUif ghly;
2.  jpUg;ghly;
3.  fhzpf;if ghly;
4.  khjh ghly;          Nghd;w thpirfshf mikf;fg;gl;Ls;sJ.
ePq;fs; ghly;fis Njl (search) tpUk;gpdhy; Nkw;Fwpg;gpl;l thpirapy; my;yJ ghlypd; ngah; nfhz;L Njb gadilaTk;.
%nthU ,iwth ruzk;! Gdpjj;jpd; Cw;whfpa ckf;Nf Gfo;!

tUif ghly;

001 அணி அணியாய் வாருங்கள்

பாடல் :
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே (2)
அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணைநின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

002 அமைதி தேடி அலையும் நெஞ்சமே

பாடல் :
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2
அவரின்றி வேறில்லையே
போற்றுவேன் என் தேவனே பறைசாற்றுவேன் என் நாதனே
எந்நாளுமே என் வாழ்விலே (2)
காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே (2)
இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே (2)
பரந்து விரிந்த உலகம் படைத்த சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
தேவனே என் ஜீவனே (2)
பாடல் :
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2)
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் (2)
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழித்துக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

004 அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

பாடல் :
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2) வாருங்கள் … …

005 அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

பாடல் :
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் நம்மை
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்
ஆலயத்தில் நாம் நுழைகையிலே
புது நினைவுகள் எழுகின்றன
அந்த நினைவுகளின் புது வருகையிலே
நம் நெஞ்சங்கள் நிறைகின்றன (2)
அன்பான மகனைப் பலிகொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)
பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார்
எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2)
என் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்

பாடல் :
இதயங்கள் மலரட்டுமே நம்மில்
இன்னிசை முழங்கட்டுமே (2)
இறையருள் வளரட்டுமே அது இகம் எல்லாம் பரவட்டுமே
அண்ணலே இங்கு நமை அழைத்தார் இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் (2)
வரையில்லா வரங்களை நமக்களித்தார் – 2 தன்
கரையில்லாக் கருணையால் நமை மீட்டார்
அன்பிலே மலர்கின்ற விசுவாசம் அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் (2)
நீதியும் உண்மையும் அதன் சுடராம் – 2 அவை
தீதில்லா வாழ்வுக்குச் சான்றுகளாம்
இருளெல்லாம் அழித்திட ஒளி கொணர்ந்தார் நெஞ்சில்
அருள் வளம் செழித்திட நமையழைத்தார் (2)
திருமகன் அன்பினைச் சுவைத்திடும் நாம் – 2 அதை
தரணியர் மகிழ்ந்திடப் பகிர்ந்திடுவோம்

பாடல் :
இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட
எழுந்திங்கு வாரீர் இறைமக்களே
அன்பினில் கலந்திட அருளினில் வளர்ந்திட
நிறைவுடன் வாரீர் மானிடரே
எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே – 2
புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்
பெறுவது வாழ்வின் கொடையன்றோ (2)
அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும்
அகிலம் வாழும் வழியன்றோ (2)
உறவினில் வளர்ந்திட உண்மையில் நிலைத்திட
தன்னையே தந்தவர் இறைவனன்றோ (2)
அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவதும்
புதுயுகம் காணும் முறையன்றோ (2)

பாடல் :
இறை பலியில் இணைந்திடுவோம்
இறைவனில் கலந்திடுவோம்
இதயத்தில் இருப்பவரே இறைகுலமாய் வருவோம்
இறை மகிமைக்காக உழைப்போம் நம்மில்
மனிதம் மலர இணைவோம் (2)
இறைவன் வார்த்தையில் இல்லம் அமைத்திட
இயேசு வழியில் செல்வோம்
உறவு வளம் பெற உண்மை உருபெற உலகில் சாட்சியாவோம்(2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
இறை மகிமைக்காக
ஏழை எளியவர் இறைவன் செய்தியை ஏற்று மகிழச்செய்வோம்
மாறும் உலகில் மாறா உன் அன்பில்
மாற்றம் கண்டு கொள்வோம் (2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2

பாடல் :
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி – 2
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே -2
மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே – 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் வாராய்
மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே – 2
திருவாழ்வைத் தேடி பெறுவோம்
மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் வாராய்



பாடல் :
இறைவனின் திருமுன் வாருங்கள்
இன்னிசை பாடி வாழ்த்துங்கள் (2)
நன்றிகள் நிறைந்த மனதுடனே
அவரின் நாமத்தைப் போற்றுங்கள்
வாருங்கள் புகழ்ந்து போற்றுங்கள்
நம்மை வாழ்விக்கும் தேவனை (2)
ஆலய மணிகளின் ஓசைதனில்
ஆண்டவர் அழைக்கிறார் வாருங்கள் (2)
வாழ்வு தரும் வார்த்தையினால்
வளமிக்கச் செய்வார் வாருங்கள் (2)
துன்பம் துயரம் தொல்லைகளை
துடைத்திடச் செய்வார் தூயரவர் (2)
பகைமை பயம் மற்றும் பாவம்தனில்
விடுதலை அளிப்பார் வேந்தனவர் (2)

பாடல் :
இறைவனின் பலியில் இணைந்திட
வருவோம்
இறைவன் அழைக்கின்றார் இனிதே அழைக்கின்றார் (2)
துன்பம் இல்லை துயரம் இல்லை இறைவனின் உறவினிலே
வாழ்வுண்டு வழியுண்டு இறைவனின் துணையினிலே
அடிமைத் தளையிலிருந்து அன்று முன்னோரை மீட்ட தேவன்
பாவத் தளையிலிருந்து நம்மை மீட்கவே அழைக்கின்றார் (2)
துன்பம் இல்லை…..
அடிமை என்றழைக்கவில்லை நம்மை நண்பர்கள் என்றாரே
உரிமை வாழ்வு வழங்க நம்மை பெயர் சொல்லி அழைக்கின்றார்(2)
துன்பம் இல்லை…. .

இறைவனின் புகழ்பாட
இங்கே இதயங்கள் பல கோடி
துறையெல்லாம் கடந்தவனே உன் துணையொன்றே நாம் தேடி
மறைபொருள் ஆனவனே உன்னை
மனங்களில் சிறை வைத்தோம் (2)
குறையுள்ள கோயிலிலே உன்னைக்
கொண்டு நாம் குடி வைத்தோம்
அன்பு உன் பேர் அறிவோம் தூய
அறிவென்றும் நாம் தெரிவோம் (2)
இன்பம் நீ எனக் கொள்வோம் நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்

பாடல் :
இறைவா இதோ வருகின்றோம்
உம்திரு உள்ளம் நிறைவேற்ற (2)
கல்லான இதயத்தை எடுத்துவிடு எமைக்
கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு (2)
எம்மையே நாங்கள் மறக்கவிடு – 2 நெஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
பலியென உணவைத் தருகின்றோம் நிதம்
பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம் (2)
கடமை முடிந்ததென நினைக்கின்றோம் – 2 எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு

பாடல் :
உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே (2)
நீயில்லையேல் நானில்லையே – 2
நான் வாழ என்னுள்ளம் வா
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் (2)
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நினைவில் நான் என்றும் வாழ்வேனய்யா
குயில் பாட மறக்கலாம் மயிலாட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் என்னை விட்டுப் பிரியலாம் (2)
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நினைவில் நான் என்றும் வாழ்வேனய்யா
உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம்
உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம் (2)
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நினைவில் நான் என்றும் வாழ்வேனய்யா



பாடல் :
சக்தியானவா ஜிவநாயகா அன்பாலே வாழும் தேவா – 2
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா (2)
மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா
அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா
ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா
திக்கனைத்துமே உன்னை எதிரொலிக்க வா
எதிரொலிக்க வா உன்னை எதிரொலிக்கவா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா
உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா
வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்த வா
ஆணவத்தையே வென்று பணிவையாக்க வா
பணிவையாக்க வா வென்று பணிவையாக்க வா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா

பாடல் :
சம்மதமே இறைவா சம்மதமே தலைவா உன்
மாலையிலே ஒரு மலராகவும் பாலையிலே சிறு மணலாகவும்
வாழ்ந்திட சம்மதமே இறைவா மாறிட சம்மதமே (2)
தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே
உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் (2)
கருவாக எனைப் படைத்து உயர்
கண்மணியாய் எனை வளர்த்து (2)
கரமதிலே உருப் பதித்து கருத்துடனே என்னைக் காக்கின்றாய்
மலையாய் நான் கணித்த பெரும் காரியமும்
உயர் காவியமும் மறைந்தே போனதே (2)
திருவாக உனை நினைத்து உயர்
உறவாகவே நெஞ்சில் பதித்து (2)
உன் பெயரைச் சாற்றிடவே
நலம் தரவே என்னை அணைக்கின்றாய்

016 தலைவா உனை வணங்க

பாடல் :
தலைவா உனை வணங்க
என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான்
சிரமே தாள் பணிந்தேன் (2)
அகல்போல் எரியும் அன்பு அது பகல்போல் மணம் பரவும் -2
நிலையாய் உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன் – 2
நீர்போல் தூய்மையையும் என் நினைவில் ஓடச்செய்யும் – 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னை சீக்கிரம் தூக்கிவிடும் -2

பாடல் :
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம் (2)
ஆஹா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே (2)
ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் – 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் – 2
அவரே நம்மைப் படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் – 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் – 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவரன்பே வழிநடத்தும்

பாடல் :
தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம் (2)
மனிதம் மலர்ந்திட புனிதம் வளர்ந்திட
நல்வாழ்வின் தீபங்களாய் இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம்வாழ்வின் தேவைகளை தினம்
நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவன் இல்லம் தினம் வந்தால் நம்
உள்ளங்கள் ஒளியில் நிறைந்திடுமே (2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருள் பெறும் இல்லங்களே (2)
இயேசுவோடு நாம் இணைந்தால் என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் இங்கு
உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே
வார்த்தை இங்கு மனுவானார் நம்
வாழ்வினில் என்றும் குடிகொண்டார் (2)
அன்பு செய்யும் உள்ளங்களே
இறைவனின் அருள் பெறும் இல்லங்களே (2)

பாடல் :
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்
குரல் கேட்டு அருள்வாயோ தலைவா (2)
பகைசூழும் இதயத்தின் சுவரையெல்லாம் என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் (2)
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் (2)
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் – 2 என்
பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்

அன்பின் ராஜாங்கம் அறிவின் தெய்வீகம்
மனிதராய்ப் பிறந்தாரே 2
ஆஹா Happy Happy Christmas – 2
பன்னீர் பூக்கள் மலர்ந்தன பாலன் பெயராலே
கண்ணீர் கனலும் அணைந்தது கடவுள் பெயராலே
கடலும் கூட சிரித்தது கண்ணே உன்னாலே எங்கள்
கவலையெல்லாம் மறைந்தது கருணையின் பெயராலே
நஞ்சும் கூட இனித்தது நாதன் பெயராலே எங்கும்
நீதி விளக்கு எரிந்தது நாதன் அன்பாலே
பஞ்ச பூதம் பயந்தது பாலன் பெயராலே எங்கும்
கொஞ்சும் மழலைப் பிறந்தது கோடி நெஞ்சாலே


fhzpf;if ghly;
பாடல் :
இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)
கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) – இயேசு
நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) – இயேசு

பாடல் :
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவார் (2)
ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2
புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2
நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2
வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே ஆண்டவர்முன் -2 ஆர்ப்பரியுங்கள் வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகிடுதே
மரியின் திருமகனே – 2
ஒளி பிறந்தது வழி திறந்தது
அருள் சுரந்தது இருள் பறந்தது – 2
உலகம் முழுவதும் உனது வடிவம்
எதிலும் உன் வதனம் – 2
இறையே வா நெஞ்சில் உறைந்திடவே
கறைகள் மறைந்திடவே
இதயக் குடிலில் உதயம் தரவே
குடிலில் உதித்தவனே
வறுமை எளிமை உனது வசந்தம்
கருணை உன் மகுடம்
மலரே வா கையில் தவழ்ந்திடவா
புனிதம் மணம் தரவே
இருண்ட உலகம் ஒளியைப் பெறவே
இரவில் உதித்தவனே – 2

பாடல் :
எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)
அன்னை மரியின் மடியில் தவழும்
இயேசுவை வணங்கிடுவோம் அவர்
வானம் புகழ பூமி மகிழ மண்ணகம் வந்துவிட்டார்
வாங்க வாழ்த்திப் போற்றிடுவோம்
எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)
வார்த்தையே மனுவாய் உருவான கடவுள்
வானவன் அன்பால் மீட்பரானார்
வானகம் விட்டு வாழ்விக்க வந்தார்
வானோர் போற்றும் தூயரானார்
பாவம் போக்கும் மாவீரன் இவரே
பாலகனாய் இங்கே தூங்குகின்றார் (2)
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்
எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)
ஏழை எளிய இறைமக்கள் வாழ்வில்
ஒளியை ஏற்ற பிறந்துவிட்டார்
பாவம் அறியா பரிசுத்த தேவன்
பாவிகள் நமக்காய்த் தோன்றிவிட்டார்
சமத்துவம் ஓங்க சன்னிதி சென்று
பாலகன் பாதம் பணிந்திடுவோம் (2)
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்



பாடல் :
சர்க்கரை முத்தே சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு
முத்தமிழ் சொத்தே முல்லைப்பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு-2
அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே
கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ ஆரிராரிரோ – 2
கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை எமக்குத் தந்தாய் … … (2)
மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் … … -2
விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றார்… …
ஆரிராரிரோ ஆரிராரிரோ – 2
விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க … …
மண்ணிலே மாந்தர் நாதங்கள் கேட்க … … (2)
கண்கவர் விண்மீன் உன்புகழ் காட்ட … … -2
தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட … …
ஆரிராரிரோ ஆரிராரிரோ – 2

தங்கச் சுடரே வா எங்கள் உயிரே வா
மரியின் மகனே வா மண்ணில் வாழ வா
பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே
இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே
பாலைவன பயிரினைப் போல் மக்கள்
வாடி நிற்கும் வேளையிலே
உயிராக வந்தாய் வரம் கோடி தந்தாய்
விண்பாதை நீயல்லவோ அருள்
வெள்ளம் சுரந்தோட ஆகாயங்கள் திறந்தனவோ
மாட்டுத் தொழு மஞ்சத்திலே விண்
காட்டும் தெய்வம் தவழ்கின்றதே
கோடான கோடி ஏழைகள் வாழ்வில்
கோலங்கள் நீ ஆகினாய் புது
வாழ்வு புவிகாண பூபாளங்கள் முழங்கிடுதே

பாடல் :
புது நாளாம் புனித நாளாம் Happy Christmas
திருநாளம் பிறந்தநாளாம் Merry Christmas (2)
இனி கவலைகள் ஏதும் இல்லை
மனக்கலக்கமும் தேவையில்லை (2)
ஆயிரம் ஆண்டுகளாய்க் காத்திட வைத்ததும் ஏனோ
கவலைகள் களைந்திடத் தானோ (2)
பாதை தேடி அலைந்தோம் உம் பாதம் வந்து அமர்ந்தோம் (2)
வாழ்வும் வழியுமானாய்
அமைதியின் அருளுருவாய் எம் இதயங்கள் நுழைந்தாய் ஏனோ
மன நிம்மதி வழங்கிடத்தானோ (2)
நீ பிறந்த மண்ணின் வாசம் எங்கள் மனதில் என்றும் வீசும் (2)
என்றும் யாவுமானாய்

பாடல் :
பூ இமைகள் மூடி கண்ணுறங்கும் பாலன் யார்
பூவுலகை நாடி வந்திருக்கும் மைந்தனார்
முன்னிடையில் உள்ள புல்லணை உன் மஞ்சமானதோ
வானத்தின் மகிமையை விடுத்து வந்தனையோ
வையத்தின் சுமைகளை ஏற்க வந்தனையோ (2)
தந்தையின் ஆசையோ ஆஹா தந்தையின் ஆசையோ
பூ இமைகள் மூடி
ஆரிராரிராரிராரோ நம்மை இரட்சிக்க வந்தாரோ
மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததும் ஏனோ
மாந்தர் குற்றங்களை மன்னித்ததும் ஏனோ (2)
தந்தையின் ஆசையோ ஆஹா தந்தையின் ஆசையோ
பூ இமைகள் மூடிஆரிராரிராரிரோ
நம்மை இரட்சிக்க வந்தாரோ
வானுடை நட்சத்திரம் துலங்கியதேனோ
ஏரோது இராஜனும் கலங்கியதேனோ (2)
இராஜன் நீரன்றோ யூதராஜன் நீரன்றோ இமைகள் மூடி

பாடல் :
பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம் அந்த
பாலனைக் கண்டிடுவோம்
பேரின்பம் அனைத்தும் குழந்தை வடிவில்
ஒளிரும் காட்சியைக் கண்டிடுவோம்
உண்மை ஒளியாய் உதித்ததே
வேற்றுமை அகற்றப் பிறந்ததே (2)
இறைமை வடிவைக் கொணர்ந்ததே – 2
மாமரியின் நல்மகனாய் மனித உருவை எடுத்ததே – 2
இருண்ட உலகை மீட்கவே மருண்ட மனதைத் தேற்றவே – 2
உலகின் ஒளியாய் பிறந்தாரே (2)
உள்ளமதைக் கொள்ளை கொள்ளும்
குழந்தை வடிவில் உதித்தாரே – 2
பாடல் :
பெத்தலகேம் குடிலில் மரியின் மடியில்
தவழும் என் பாலா எந்தன் இதயத்தில் நீ வாராய் (2)
ஏழ்மையை ஏற்று எளிமையில் வாழ்ந்திட
குடிலினில் நீ பிறந்தாய் நல் குழந்தையாய் நீ தவழ்ந்தாய் (2)
இந்த ஏழையின் இதயக் குடிலினில் தவழ
எழுந்து நீ வாராய் எழுந்து நீ வாராய்
பாவிகள் வாழ்வைப் பரிசுத்தமாக்கிட
பாரினில் நீ பிறந்தாய் பனிச்சாரலில் நீ மலர்ந்தாய் (2)
இந்த பாவியின் உள்ளக் குடிலினில் தவழ
எழுந்து நீ வாராய் எழுந்து நீ வாராய்

பாடல் :
பொன்னும் வெள்ளைப் போளமும்
அரசர் தந்த காணிக்கை
அப்ப ரசமும் பலிகளும் ஏழை யாம் தரும் காணிக்கை
ஆடு மேய்க்கும் ஆயர்கள் அகில ஆயனைக் கண்கொண்டார் -2
மாடு வாழும் குடிலிலே ஆட்டுக்குட்டியைத் தந்தாரே
ஏழைக்கைம்பெண் காணிக்கை ஏத்திப்போற்றி ஏற்கிறேன் – 2
எளியோர் எங்கள் காணிக்கை இயேசுபாலா ஏற்பீரே
பொருளால் நிறைந்த வாழ்க்கை பொருளில்லாமல் ஆனதே – 2 அருளால் நிறைந்து வாழ்வதே அப்பமாக ஆகுமே

பாடல் :
மகிழ்ச்சியை விதைத்திட வந்தவரே
மனங்களில் அமைதியை பொழிபவரே
துயரங்கள் போக்கிடும் தூயவனே
எங்கள் இதயங்கள் எழுந்தருள்வாய் (2)
பிறந்தார் இயேசு பிறந்தார்
நிறைந்தார் நெஞ்சம் நிறைந்தார் (2)
ஒன்றாக நாம் கூடி அவரன்புப் புகழ்பாடி
உறவோடு வாழ்ந்திருப்போம்
சாதிகள் பேதங்கள் பிரிவினை மோகங்கள்
பிணக்குகள் ஒழிந்திடவே
மனிதரை மனிதராய் மதித்திடும் மாண்புகள்
மனமெங்கும் மலர்ந்திடவே (2)
எல்லோரும் சமமென்று நாம் பாடுவோம்
சமதர்ம சமுதாயம் நாம் காணுவோம்
நல்ல மனிதராய் வாழ்ந்திருப்போம்
உண்மை மனிதத்தை வளர்த்தெடுப்போம் பிறந்தார்
வாடிய முகங்களில் தனிமையின் கொடுமைகள்
(
தளர்வுகள்) அழிந்திடவே
மகிழ்ச்சியை பொருட்களில் தொலைத்தவர்
தோழமை உறவினில் உயிர்பெறவே (2)
பாசத்தை தேசத்தின் மொழியாக்குவோம்
பகிர்கின்ற சமுதாயம் நாம் காணுவோம்
இறையாட்சியின் மனிதர்களாய்
இறையரசினை வளர்த்தெடுப்போம் பிறந்தார்..

jpUg;ghly;fs;
பாடல் :
ஆண்டவரே உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச்செய்யும்-2
எனக்கு நீதி அருள்கின்ற என் கடவுளே
நான் மன்றாடும்போது எனக்கு பதிலளியும்
நான் நெருக்கடியில் இருந்தபோது
நீர் எனக்கு துணைபுரிந்தீர் இப்போதும் எனக்கு மனமிரங்கி
என் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்தருளும் -2
நலமானதை எங்களுக்குத் தந்திட யாருளர்?
என்று கேட்பவர் இங்கு பலராய் உள்ளனர்
என் ஆண்டவரே எங்கள் மீது
உம் முக ஒளி வீசச்செய்யும் ஏனெனில்
நாங்கள் தனிமையாய் இருந்தாலும்
நீர் எம்மை வாழச் செய்தீர்

பாடல் :
ஆண்டவரே நீரே எனக்குப் புகலிடம் புகலிடம் – 2
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ
எவரது பாவம் மறைக்கப்பட்டதோ
ஆண்டவர் எந்த மனிதரின் தீய செயலை எண்ணவில்லையோ
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ
அவர்கள் அனைவரும் பேறுபெற்றவர் – 3
எனது பாவத்தை உன்னிடம் அறிவித்தேன்
என் தீயசெயலை மறைக்கவில்லை
ஆண்டவரிடம் என் குற்றங்களை
ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேன்
நீதிமான்கள் ஆண்டவரில் என்றும்
மகிழ்ந்து பாடுங்கள் மகிழ்ந்து பாடுங்கள் – 2

பாடல் :
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் (2)
என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2
எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று
சுவைத்துப்பாருங்கள் -2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று

பாடல் :
ஆயர் தம் மந்தையைக் காப்பது போல
ஆண்டவர் நம்மைக் காத்திடுவார் -2
மக்களினமே ஆண்டவர் வார்த்தை கேளுங்கள்
தொலைதூரப் பகுதிகளில் அதனை அறிவியுங்கள் (2)
ஏனெனில் யாக்கோபை ஆண்டவர் மீட்டார்
வலியவன் கையினின்று விடுவித்தார் -2
கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக்களித்திருப்பர்
அதுபோல இளையோரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர் (2)
அவர்களது அழுகையை நான் மிகழ்ச்சியாக்குவேன்
அவர்களுக்கு ஆறுதல் அளித்திடுவேன் -2




fhzpf;if ghly;
பாடல் :
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்
ஆனந்தம் ஆனந்தம் என் மனதில் ஆண்டவா உனைப்பாட
ஆண்டவா உனைப்பாட ஆண்டவா உனைப்பாட
வான்முகிலும் உயர்மலையும் உந்தன் புகழ்பாட
தேன் பொழியும் நறுமலர்கள் உன் பெயர் சுவை பாட
வான் பொழியும் நீர்த்துளிகள் உந்தன் அருள்பாட
யான் உனது திருப்புகழை கவியால் தினம்பாட
ஆண்டவா உனைப் பாட
பகலொளியும் பால் நிலவும் ஒளியால் உனைப்பாட
அலைகடலும் அதன் சிறப்பும் கருணையை தினம்பாட
மழலைகளின் தேன்மொழிகள் தூய்மையின் நிறம்பாட
யான் உனது திருப்புகழை கவியால் நிதம் பாட
ஆண்டவா உனைப் பாட

038 அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே (2)
பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ … (2)
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் (2)
திரியாகக் கருகி மெழுகாக உருகி – 2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே

039 இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக

இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக (2)
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை (2) என்
பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு
காய்ந்து கனிந்த கனிகளும்
ஓங்கி உயர்ந்த மரங்களும் அதைச்
சூழ்ந்து வளர்ந்த செடிகளும் (2)
இயற்கை கூறும் கவிதைகள் யாவும்
இறைவன் தந்த கொடைகளே (2) – நினைத்தேன்
பறந்து திரியும் பறவைகள் அவை
பாடும் கடல்வாழ் விலங்குகள்
காற்றும் கடலும் கார்முகில் வான
வில்லும் நிலவும் விண்மீன்களும் (2)
இயற்கை கூறும் கவிதைகள் யாவும்
இறைவன் தந்த கொடைகளே (2) – நினைத்தேன்

040 இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் எம்மை

இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் எம்மை
எரியா விளக்கு எனை நான் உனக்குத்
தந்தேன் ஏற்றிடுவாய் (2)
உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்
சுடராய் மாற்றிடுவாய்
மலரா கொத்து வாழ்வினைக் கொய்து
தாள்களில் படைக்கின்றேன் (2)
புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட வரம் கேட்பேன்

041 எது வேண்டும் உனக்கு இறைவா

எது வேண்டும் உனக்கு இறைவா – 2
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா -2 எது வேண்டும் – 2
மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன் – 2
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா எது வேண்டும் – 2
பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையோ
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன் – 2
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா எது வேண்டும் – 2

042 எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்

எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய் தலைவா (2)
அன்பும் அருளும் பண்பும் பாசமும் எல்லாம் நீ தந்தது (2)
வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும்
மகிழ்வுடன் நீ தந்தது (2)
சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள்
எல்லாம் நீ தந்தது (2)
உடல் பொருள் ஆவி உணர்வுகள் எல்லாம்
உவப்புடன் நீ தந்தது (2)

043. எல்லாம் தருகின்றேன் தந்தாய்

எல்லாம் தருகின்றேன் தந்தாய்
என்னையும் தருகின்றேன் (2)
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உமக்குக் காணிக்கை (2)
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் (2)
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதியாக்குவாய் – 2

044 என்னைத் தந்தேன் இறைவா இன்று

என்னைத் தந்தேன் இறைவா இன்று
ஏற்றிடுவாய் என் தலைவா
உள்ளதெல்லாம் உம்மிடமே உவப்புடனே தருகின்றேன்
ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் – 2
என்னிடம் இருப்பது எதுவுமில்லை
எனக்கென்று உள்ளதும் ஒன்றுமில்லை (2)
எனக்காய் அன்று உன்னைத் தந்தாய் இன்று
உமக்காய் நான் என்னைத் தந்தேன்
ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் அன்பின்
காணிக்கைப் பொருளாய் மாற்றிடுவாய்
உறவுகள் உலகில் நிறைவில்லை
உயர்வுகள் தாழ்வுகள் நிலைப்பதில்லை (2)
உணர்வாய் இன்று உன்னைக் கண்டேன்
உலகே உன்னில் பணியக் கண்டேன்
ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய்
என்னையும் தயவாய் ஏற்றிடுவாய்

045 என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்

என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என் வாழ்வைப் பலியாக்கவே
உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
பிறரன்பு பணி செய்யவே
என் இயேசுவே என் ஜீவனே
உம்மோடு உறவாடவே (2)
புகழோடு நான் வாழவில்லை உம்
புகழொன்றே எனக்குப் போதும்
அருள் வாழ்வினில் நான் வளர உம்
அன்பொன்று எனக்குப் போதும்
உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் உம்
உறவொன்று எனக்குப் போதும்
மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் உம்
கரமொன்றே எனைத் தேற்றிடும்
அயலாரிலே உம்மைக் காண
என்னை நான் பலியாக்கினேன்
ஆண்டவரே உம்மை அடைய
என்னை நான் தியாகம் செய்தேன்
உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
என்னை நான் அர்ப்பணித்தேன்
நற்செய்தி பணியை நாளும் செய்ய
நாதனே என்னைத் தந்தேன்


046. என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன்

என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன்
என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய்
உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு
உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று (2)
என் நெஞ்சில் வாழ்பவன் நீ தானே
இனி அச்சம் கொள்வதும் வீண்தானே (2)
எந்தன் பணியில் ஆயிரம் தடைகள் வந்திடுமாயினும் இயேசுவே
உனது வழியில் பயணம் தொடரும்
எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன்
சுயநலத்தின் திரைகளைக் களைந்து என்னைத் தந்தேன் (2)
ஒரு ஜீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால்
அது தானே உம் முன்னால் பெரிதாகும் (2)
மகிழ்வைத் தேடும் மானிடர் மகிழ்ந்திட
தந்திடும் என்னை இயேசுவே உனது கரத்தில் ஏற்க வேண்டி

047 காணிக்கை இன்று தரவந்தோம் இறைவா

காணிக்கை இன்று தரவந்தோம் இறைவா
வாழ்வைப் பலியாக்க வந்தோம் நாதா
எமைப் பலியாக்கவே உம் பதம் வருகின்றோம்
கனிவுடன் ஏற்றிடுவாயே கருணை தேவா
புழுதி படிந்த கரங்களில் என் பொன்னான வேர்வைத்துளி
உம் பாதம் எடுத்து வந்தோம்
நீலக்கடலில் கரையும் எம் முத்தான குருதித்துளி
பொற்பாதம் கொண்டு வந்தோம்
உழைப்பின் உயர் பலன் யாவும் பீடம் வைத்தோம்
உம் உடலாய் இரத்தமாய் மாறச் செய்வாயே
விடியற்காலை ஏங்கும் எங்களின் விழிகளில் கண்ணீர்த்துளி
உம் பாதம் எடுத்து வந்தோம்
இருள் அகலும் ஒளி ஏற்ற யாம் சிந்தும் ஈரத்துளி
பொற்பாதம் கொண்டு வந்தோம்
உழைப்பின் உயர் பலன் யாவும் பீடம் வைத்தோம்
உம் உடலாய் இரத்தமாய் மாறச் செய்வாயே

048 காணிக்கை தர நான் வருகின்றேன்

காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (2)
என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்
என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)
என்னையே தான் நீ கேட்கின்றாய் நான்
என்னையே முழுவதும் தருகின்றேன் (2)
சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் மனம்
உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)

049 கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் ராகம்

கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் ராகம்
அர்ப்பணித்தேன் என் ஆருயிரை
வாழ்வை உன் கரங்களில் கையளித்தேன்
உன்மடி அமர்ந்து உன்னையே பழித்தல் உறவென்றாகுமா
உன்மொழி கேட்டும் என்வழி வாழ்தல் உன்னிடம் சேர்க்குமா
உன் பணி தொடர வருகின்றேன் உள்ளத்தைத் தருகின்றேன்
எந்தன் உள்ளத்தைத் தருகின்றேன்
உழைக்கும் மனிதர் உயரும் நிலையும் உலகில் மலரணும்
உழைப்பின் மாண்பை வளர்க்கும் செயல்கள்
உண்மையில் நிலைக்கணும்
உரிமைகள் உணர்ந்து வருகின்றேன்
உம்மிடம் தருகின்றேன் இன்று உம்மிடம் தருகின்றேன்

050 கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை

கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2)
தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே (2)
அப்பமும் ரசமும் தருவதன் வாழ்வில்
தந்தேன் என்னையே அன்புடனே (2)

051 அடியோர் யாம் தரும் காணிக்கையை

அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே (2)
பாவியென்றெம்மைப் பாராமல்
பாவத்தின் தீமையை அடையாமல் (2)
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
வாழ்வுக்கு ஒருநாள் முடிவு உண்டு விண்
வாழ்வுக்கு எமக்கென்று எது உண்டு (2)
என் மனம் அறிந்ததன் பயன் என்னவோ
எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

052 அர்ப்பண மலராய் வந்தேன்

அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனையாக்கினேன் என்னை (2)
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் (2)
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன் (2)
கோதுமை மணியாய் மடிந்து என்னை
வெண்ணிற அப்பமாய்த் தந்தேன் (2)
என்னுடல் உன்னுடல் ஆகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னைக் கனிவுடன் ஏற்பாயே -2 ….
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் (2)
மதியில்லாதவன் ஆனாலும் விழியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன் -2

053 தரணியர் இணைந்து தரும்பலிப் பொருளை

தரணியர் இணைந்து தரும்பலிப் பொருளை
தந்தாய் நீ ஏற்பாய் (2)
நிதமும் உழைத்த பயனாக
நிலத்தில் விளைந்த பலன் யாவும் (2)
நிறைவுடன் திருமுன் படைக்கையிலே
அனுதின உழைப்பையும் அளிக்கின்றோம்
உறவை உணர்த்தும் பலியினிலே
ஒருங்கே உன்னில் இணைந்திடவே (2)
வேற்றுமை தவிர்த்தெம் வாழ்வினிலே
ஒற்றுமை வளர்த்திட அருள்புரிவாய்

054 தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன்

தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன்
என்றும் எந்தன் பணிவாழ்வை ஏற்றிடுவாய் (2)
அன்பொன்றே தினம் தேடி அலைகின்ற
நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம்தேடி ஆர்வமுடன்
காத்திருக்கும் மனிதர்கள் கூட்டம் இங்கே (2)
அன்போடு நான் வாழுவேன் சிந்தும்
கண்ணீரை நான் மாற்றுவேன் (2)
நல்லன்பைத் தேடும் புவி மாந்தர் வாழ
என் வாழ்வைப் பலியாக்குவேன் – 2
விடியாத பொழுதென்று வீங்கிடும் விழியோடு
ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்துபோகும்
பரிதாப வாழ்க்கை இங்கே (2)
தேவா நான் சுடராகுவேன் எங்கும்
நம்பிக்கை ஒளியேற்றுவேன் (2)
போராடும் நெஞ்சில் போராட்டம் ஏற்க
என் வாழ்வைப் பலியாக்குவேன் – 2

055 நாங்கள் தருகின்ற காணிக்கை

நாங்கள் தருகின்ற காணிக்கை
இதை ஏற்றருள் தெய்வமே (2)
நாங்கள் தருகின்ற காணிக்கை
நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் (2)
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் (2)
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

056 படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே (2)
இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் -2
அகிலமென்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் -2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே -2
இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் -2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே -2
தந்தேன் என்னை தந்தேன் என்றும்
என் வாழ்வு உன்னோடுதான் (2)

057 படியேறி வருகின்றேன் தேவா என்னை

படியேறி வருகின்றேன் தேவா என்னை
பலியாக்க வருகின்றேன் தேவா நான்
படியேறி வருகின்றேன் தேவா
மகனையே பலியாகக் கேட்டாய் ஆபிரகாம்
மனமார பலியாக்க வந்தார் (2)
மனதினை மாசின்றிக் கேட்டாய் நான்
மகிழ்வோடு தருகின்றேன் உமக்கே
ஏழை நான் என்றேங்கி நின்றேன் என்னை
நீ வேண்டும் வாவென்று சொன்னாய் (2)
பிழை செய்து நான் வாழ்ந்த போதும் நீ
தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய்

058 பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை

பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் (2)
நிலையில்லா இந்தப் பூவுலகில் நித்தம் உம் பாதையிலே (2)
நின் சித்தம் போல் உம் கரத்தால் -2 நித்தம் வழிநடத்தும் -2
பரிசுத்தமில்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க (2)
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – 2 பரிசுத்தமாக்கிவிடும் -2

059 பலிப்பீடம் தேடி வருகின்றேன்

பலிப்பீடம் தேடி வருகின்றேன்
திருப்பாதம் வணங்கித் தருகின்றேன் (2)
சுகம் தினம் தரும் அருள் ஒளி பெற உள்ளதெல்லாம் தருவேன்
தருவேன் நான் தருவேன் – 2
படைத்தவன் நீயன்றோ உம் படைப்பின் வியப்பும் நானன்றோ -2
கொடுத்தவன் நீயன்றோ -2 உள்ளதெல்லாம் நான் தருவேன்
தருவேன் நான் தருவேன் – 2
எளியவன் நானன்றோ என் வாழ்வும் வழியும் நீயன்றோ -2
மகிழ்பவன் நானன்றோ 2 உள்ளதெல்லாம் நான் தருவேன்
தருவேன் நான் தருவேன் – 2

060 பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை

பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ நீயே
என்னையாளும் மன்னவனன்றோ
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்
நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்? – இன்று
உனக்கு நான் எனையளித்தேன்
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உமதருட்கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன் என்றும்
உன்னிலே வாழ்ந்திடுவேன்

061 வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தர வந்தேன்

வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தர வந்தேன்
காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன்
கருணை பொழிந்து எம்மை ஏற்பாய்
திறந்த மனதுடன் பரந்த அன்புடன்
பகைவரை ஏற்றுக்கொண்டேன் (2)
நிறைந்த மகிழ்ச்சி கண்டேன் அது மன்னிப்பில் எழக்கண்டேன்
சிறந்த மனிதனாய் வாழ்ந்திட நினைத்தேன்
முயற்சியைத் தருகின்றேன் (2)
பிறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து
அதனைக் கொண்டு வந்தேன் நான் அதனைக் கொண்டுவந்தேன்
மரமாய் வளர விதையும் தன்னை அழிக்கும் நிலைகண்டேன் (2)
உரமாய் ஆகிவிட்டேன் பிறர் வாழ்ந்திட எனைக் கொடுத்தேன்
பரமே உந்தன் கரமாய் இணைந்து பலியினைத் தருகின்றேன் (2)
சிரமே பணிந்தேன் அன்பில் மனிதனாய் என்னை மாற்றிடுவாய்
நீ என்னை மாற்றிடுவாய்

khjh ghly;

062 அம்மா நீ தந்த ஜெபமாலை

பாடல் :
அம்மா நீ தந்த ஜெபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2)
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2)
சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய்
நின்றாய் எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு
மகனானார் அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும்
காணாமல் தேடிப் புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே
துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள்
கண்டோம் உயர் வாழ்விழந்த எமக்காக உன்மைந்தன்
உயிர் தந்தார் அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும்
வாட்டிய சிலுவைப்பாடுகளும் சாய்த்திட்டக் கோரம்
பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார்
மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக்
கண்டோமே சாகாமை கொண்ட
நின் மகனார் சாவினை வென்றெழுந்தார் அவரே ஆவியால் உன்னை நிரப்பியதும்
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் மூவுலகரசி ஆக்கியதும்
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே



063 அம்மா மரியே வாழ்க

பாடல் :
அம்மா மரியே வாழ்க
மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க
எங்கள் மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க
அறியாத மாந்தருக்கு அறியவைத்தாய் உனை
ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய் (2)
மறையாத வான் நிலவாய் மாறாத வான் மழையாய் – 2
திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க – 3
உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா உன்
அருகாமை காண இருள் விலகுதம்மா (2)
உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை -2
உம் சன்னிதியில் உணர்ந்து கொண்டோம் ஒரு நாளில் – 3

064 அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க

பாடல் :
அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க
மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க (2)
வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே
அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க வாழியவே
மாமரியே மாதவளே வாழ்க வாழ்க
மாந்தர்களை காப்பவளே வாழ்க வாழ்க (2)
மனமகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க
தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க
இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க
மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க (2)
வான் மண்ணின் ராக்கினியே வாழ்க வாழ்க
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க

065 அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

பாடல் :
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே (2)
பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின் தாயாரே
பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2)
இப்போதும் நீர் மன்றாடும் எப்போதும் நீர் மன்றாடும் (2)
தீமைகள் நெருங்குகையிலே எம்மைத் தாங்குமம்மா
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர் உம் மகனும் வாழியவே
மகனும் வாழியவே – 3

066 அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே

பாடல் :
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களுள் சிறந்தவள் நீயே மாமரியே நீ வாழ்க
அன்னையே வாழ்க வாழ்க லூர்தன்னையே வாழ்க வாழ்க – 2
வாழ்வில் கருணையாய் வந்திடுவாய்
வறியவர் துயரம் தீர்த்திடுவாய்
உமையை இழந்து உழல்வோர்க்கு
உலகம் காண வழிசெய்வாய்
உள்ளங்கள் இணைந்தே போராடும்
மனிதர்க்குத் துணையாய் நின்றிடுவாய் (2)
உறவில் மலரும் வாழ்வாக
உண்மை வழியைக் காட்டிடுவாய் அன்னையே
மனதினில் நம்பிக்கை வளர்த்திடுவாய்
மனிதம் காத்திட துணை செய்வாய்
ஊமைக் குரலாய் எழும்போது
அடிமைச் சிறையைத் தகர்த்திடுவாய்
விடியலுக்காகவே வாழ்ந்திடவே
விடுதலைத் தாயாய் அருகிருப்பாய் (2)
மண்ணில் மகத்துவம் கண்டிடவே
மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாய் அன்னையே

067 அழகின் முழுமையே தாயே

பாடல் :
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே
இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
அருளே நிறைந்த மாமரியே அருள் வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம் (2)
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

068 அன்னைக்குக் கரம் குவிப்போம்

பாடல் :
அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் – 2
கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
பாவமதால் மனிதன் அருளிழந்தான் அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்


069 அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

பாடல் :
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே எம்மை
அரவணைத்துக் காப்பாய் நீயே (2)
அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே (2) நன்றிப் பூக்கள்

070 ஆரோக்கிய மாதாவே உமது புகழ்

பாடல் :
ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் எந்நாளும் பாடித் துதித்திடுவோம் (2)
அலைகள் மோதிடும் கடற்கரை தன்னில்
வசித்திட ஆசை வைத்தாயே (2)
பலவகைக் கலைகளும் பாரினில் துலங்கிட
அனைவருக்கும் துணை புரிந்தாயே – 2
தேன்கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)
வானகமும் இந்த வையகமும்
அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே -2

071 ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்

ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
உன் அன்பின் பெருமை அகிலம் விளங்க
மாண்பைப் போற்றுவேன் (2) ஆவே.. ஆவே.. ஆவே..
பாவிகளின் ஆதரவே பாருலகோர் ஒளியே – 2
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா – 2
தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் – 2
மாய உலகிலே காத்திடுவாய் அம்மா – 2

071 இதோ ஆண்டவரின் அடிமை

பாடல் :
இதோ ஆண்டவரின் அடிமை
ஆகட்டும் இறைவா உம் திருவுளப்படியே (2)
என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது
என் மீட்பர் இறைவனிலே என் மனம் மகிழ்கின்றது
என் மனம் மகிழ்கின்றது என் மனம் மகிழ்கின்றது
ஏனெனில் ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
இன்று முதல் என்றும் எனைப் பேறுடையாள் என்பரே
பேறுடையாள் என்பரே பேறுடையாள் என்பரே

072 இறைவனின் தாயே இதயத்தில் நீயே

பாடல் :
இறைவனின் தாயே இதயத்தில் நீயே
வாழ்த்துகள் பாடுவோம் உந்தன் பாதம் சேருவோம்
உந்தன் நாமம் போற்றுவோம் (2)
அருள் நிறை மரியே மாமரியே
அருள்தனைப் பொழிவாய் ராக்கினியே
புதுமைகள் புரிந்திடும் தூயவளே
புவிக்கெல்லாம் அன்னையாய்த் திகழ்பவளே
உந்தன் பாதம் நாடிவந்தோம் உம்மை என்றும் தேடிவந்தோம் -2
திருமகன் தாய்மரியே என்றென்றும் நீ மங்கையர் குலவிளக்கே 2
நீதியும் நேர்மையும் நிறைந்தவளே
இறையருள் எமக்காய் வேண்டுமம்மா
தேவைகள் யாவையும் தருபவளே
வேண்டிய வரங்களைத் தாருமே
உந்தன் பாதம் நாடிவந்தோம் உம்மை என்றும் தேடிவந்தோம் -2
தேவதாய் நீயே அன்பின் துhய தாய் நீயே
பாடுவோம் பாடுவோம் உம்மை வாழ்த்திப் பாடுவோம் (2)

073 இனிய உன் நாமம் ஓதிடல் தினமே

பாடல் :
இனிய உன் நாமம் ஓதிடல் தினமே
அனைவரும் மகிழ்வோமே
தாயினும் மேலாம் தாயுமே நீயே தமியோர் திரவியமே -2
அன்பிதே அன்பிதே மாதா தன்னலமேயற்ற மாதா -2
கலைமொழியால் உனைத் துதித்திடல் நாளும்
கவலையே தீருமம்மா (2)
தேனிசைப் பாவால் தாயுனைப் பாட
தெவிட்டா உணவாமே -2
பஞ்சமும் நோயும் பகையும் தீர பரிவுடன் காருமம்மா -2
வளமோடு வாழ்வும் நலமுடன் வாழ வரமொன்று தாருமம்மா -2

074 உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

பாடல் :
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2
கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

075 எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப்போற்றிடுதே

பாடல் :
எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப்போற்றிடுதே – 2
இந்த அடிமை என்னை அவர் நினைந்ததனால்
அந்த மீட்பரில் நெஞ்சம் மகிழ்கின்றதே
வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் தினம் எனை வாழ்த்திடுமே
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள்ளே பெரும் பேறுபெற்றீர்
வாழ்க மரியே வாழ்க
அவர் தம் கரம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம்
அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செருக்கடைந்தோரைச் சிதறடித்தார் அவர்
வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி
எளியோரை மிக உயர்த்திவிட்டார்
பசித்தோரைப் பல நலன்கொண்டு நிறைத்து
செல்வரை வெறுங்கையரென விடுத்தார்

076 சதா சகாய மாதா

பாடல் :
சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே
நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா (2)
துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் – 2
கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம்
இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் – 2
இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா

077 தாவீதின் குலமலரே ஒளி தாங்கிடும் அகல் விளக்கே

பாடல் :
தாவீதின் குலமலரே ஒளி தாங்கிடும் அகல் விளக்கே
எம்மைக் காத்திடும் ஆரணங்கே அருள் சுரந்திடும் தேன்சுனையே
இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார் (2)
மறையவர் புகழும் மாமரியே கரை சேர்ப்பதுவே உன் பணியே
மக்களின் மனமே மகிழ்ந்திடவே நற்கனி சுதனை எமக்களித்தாய்
கற்றவர் மற்றவர் யாவருமே பொற்பதம் சேர்ந்திட வேண்டுமம்மா

078 நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்

நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
எந்நாளுமே அன்னையின் புகழ்ப்பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்பிற்கு புகழ் பாக்கள் பாடிடுவோம்
ஆ அன்னையே வாழ்க – 2
அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க
இறைவன் திருவுளத்தை நிறைவேற்றிட மனமுவந்தாய் -2
என்றும் மறைபுகழ் உன்வழி இறையுள்ளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்
தரணிக்கு தாயானாய் திருத் தாய்மையைப் பாடுகிறோம் -2
என்றும் திருவரம் இயேசுவின் அன்பர்கள் ஆகிட
தாயே உன் அருள் தாராய்




079 மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

பாடல் :
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்

080 மாதாவே துணை நீரே உம்மை

பாடல் :
பாடல் (இசை):

மாதாவே துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரம் தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எமைப்பாரும்
வானோர் தம்அரசே தாயே எம் மன்றாட்டை தயவாய்க் கேளும்
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும்
ஒன்றே கேட்டிடுவோம் தாயேயாம் ஓர் சாவான பாவந்தானும்
என்றேனும் செய்திடாமல் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்

081 வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே

பாடல் :
பாடல் (இசை):

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை
கரங்களை விரித்தே கள்வனைப் போல்
கழுமரத்தினில் கண்டதினால்
கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே
மண்ணவர்க்காகத் தன்னுயிரை
இன்று மாய்த்திடக் கண்டதினால்

More Songs please visit the following link;

No comments:

Post a Comment