- எங்களது Church ல் கடந்த 21.10.2012 அன்று Dengue Awareness Program ஆனது மூவொரு இறைவன் கருணையால் நடைபெற்றது.
- இந்த முகாமில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இதை எங்களது மதிப்பிற்குரிய பங்குதந்தை அருட்பணியாளர்.வின்சென்ட் பால்ராஜ் அவர்களால் வரவேற்பு நல்கபட்டது.
- இதில் Dr. William Lawrence, பவானி வட்டார சுகாதார அதிகாரிகள் Mr.Sethu மற்றும் Mr.Rama Krishnan, நமது வளரும் Dr.Merish (Studying) அவர்களாலும் இந்த முகாமானது வழிநடத்தப்பட்டது.
- முதலில் Mr.Rama Krishnan அவர்கள் Dengue காய்ச்சலை பற்றி முழுமையாக விளக்கி கூறினார்.
- பின்னர் Dr.Merish அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த Power point Presentation மூலம் மக்களுக்கு Dengue காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, இதை தடுக்க நாம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றிய முழு விளக்கங்களும் Slide மூலம் தரப்பட்டது.
- பின் Dr. William Lawrence அவர்கள் இதன் சிகிச்சை முறைகளை பற்றி தெளிவாக கூறினார்.
- அதன் பின் Mr.Sethu அவர்கள் நமது பகுதியில் இந்த Dengue காய்ச்சலை ஒழிக்க நமது அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் செய்து வரும் வேலைகளையும் எடுத்து கூறினார்.
இந்த முகாமானது கலந்து கொண்ட அனைவருக்கும் Dengue காய்ச்சலை பற்றி ஒரு நல்ல விழிப்புணர்வை நிறைவாக தந்திருக்கும் என்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது.
முடிவாக இதை நடத்த எங்களுக்கு வாய்ப்பு தந்த மூவொரு இறைவனுக்கு நன்றி கூறி முகாம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment